பருவநிலை பாதிப்பு இல்லாத சிங்கப்பூர் உருவாக முயற்சி

பருவநிலை பாதிப்பு இல்லாத சிங்கப்பூர் உருவாக முயற்சி

2 mins read
4fc044a5-1af3-4f75-bdac-228eea58fe36
-

தனிப்பட்டோர், எல்லா துறைகளையும் ஈடுபடுத்தும் தேசிய கலந்துரையாடல் தொடக்கம்

சிங்­கப்­பூரை பரு­வ­நி­லை­யால் பாதிக்­கப்­ப­டாத நாடா­கப் பலப்­ப­டுத்த முயற்­சி­களை எடுக்­கும்­படி மக்­கள் வலி­யுறுத்­தப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

இந்த இலக்கை நிறை­வேற்­றும் வகை­யில் அனைத்துத் துறை­களை­யும் தனிப்­பட்ட ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் தேசிய கலந்­து­ரை­யா­டல் இயக்­கம் நேற்று தொடங்­கப்­பட்­டது.

அந்த இயக்­கம், தனிப்­பட்­ட­வர்­கள், கல்வி நிலை­யங்­கள், அமைப்பு­கள் உட்­பட சமூ­கத்­தின் அனைத்துப் பிரி­வி­ன­ரை­யும் உள்­ள­டக்­கும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ நேற்று தெரி­வித்­தார்.

'சுற்­றுச்­சூ­ழ­லுக்­கான பங்­கா­ளி­கள் கருத்­த­ரங்­கம் 2022' என்ற நிகழ்ச்­சி­யில் அவர் பேசி­னார்.

சுற்­றுச்­சூ­ழல் பிரச்­சி­னை­கள் பற்றி விவா­திப்­ப­தற்­காக இந்­தக் கருத்தரங்கு ஆண்­டு­தோ­றும் நடக்­கிறது. அதில் சுற்­றுச்­சூ­ழல், நிதி­வள மூலா­தாரத் தூணை அமைச்சர் தொடங்­கி­ வைத்­தார்.

துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் கடந்த ஜூன் மாதம் 'முன்னே­றும் சிங்­கப்­பூர்' இயக்­கம் பற்றி அறி­வித்­தார். அந்­தப் புதிய சமூக கட்­ட­மைப்­பில் ஆறு தூண்­கள் அடிப்­ப­டை­யா­னவை என்­றும் அவர் குறிப்­பிட்டு இருந்­தார். அந்தத் தூண்­களில் நேற்று தொடங்­கப்­பட்ட இயக்­க­மும் ஒன்று.

பரு­வ­நி­லை­யால் பாதிக்­கப்­ப­டாத சிங்­கப்­பூரை உரு­வாக்­கு­வ­தில் முழு நாட்­டை­யும் ஈடு­ப­டுத்த வேண்­டி­யது முக்­கி­ய­மான ஒன்று என்று திரு­வாட்டி ஃபூ குறிப்­பிட்­டார்.

பரு­வ­நிலை மாற்­றத்தை சிங்­கப்­பூர் இப்­போது இரண்டு வழி­களில் சமா­ளிக்­கிறது. கடல் மட்­டம் உயர்­வதைத் தடுக்க கடல் தடுப்பு சுவர்­களைக் கட்­டு­வது அவற்­றில் ஒன்று. கரி­மப் புகை­யைக் குறைப்­பது போன்ற முயற்­சி­கள் மற்­றொன்று.

இந்த முயற்­சி­க­ளுக்கு கணி­ச­மான நீண்­ட­கால முத­லீ­டு­கள் தேவை. இந்த இலக்­கு­களை நிறை­வேற்ற பல ஆண்­டு­கள் பிடிக்­கும் என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

பல தரப்­பி­னரை ஈடு­ப­டுத்­தும் புதிய முயற்­சி­களில், பொரு­ளி­யல் வளத்தை நிலை­யாக எப்­படி பலப்­படுத்­து­வது என்­ப­தில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தும் விவா­திப்­பு­கள் இடம்பெறும்.

பரு­வ­நிலை செயல் வாரம் 2022 என்ற ஒரு நிகழ்ச்சி செப்­டம்­பர் 19 முதல் 25 வரை நடக்­கிறது. இந்­நி­லை­யில் நேற்­றைய கருத்­த­ரங்­கும் நடந்­தது.

நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சுக்கு இந்த ஆண்டு 50 வய­தா­கும் நிலை­யில், அமைச்­சர் திரு­வாட்டி ஃபூ சிங்­கப்­பூர் ஆறு தூய்மை இயக்­கம், நியூ­வாட்­டர் உரு­வாக்­கம் போன்ற நம் முன்­னோடி­க­ளின் சாத­னை­களை நினை­வு­கூர்ந்­தார்.

சிங்­கப்­பூ­ரின் பசுமை உரு­மாற்­றம் அர­சாங்­கம், நிறு­வ­னங்­கள், சமூ­கம், மக்­கள் அனை­வ­ரின் முயற்­சி­க­ளை­யும் உறு­தி­யை­யும் சார்ந்தே இருக்­கிறது என்றார் அமைச்­சர்.

பொது­மக்­கள் தங்­க­ளு­டைய யோச­னை­கள், கருத்துகளை go.gov.sg/stewardenv என்ற முக­வரி­யில் தெரி­யப்­ப­டுத்­த­லாம்.