பிரிட்டன் அரசியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரைக் கம்பத்தில் தேசிய கொடி

பிரிட்டன் அரசியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரைக் கம்பத்தில் தேசிய கொடி

2 mins read
8f784426-bf2c-4708-95f6-d33ce5515e53
நாடாளுமன்ற இல்லத்தில் தேசிய கொடி நேற்று அரைக் கம்பத்தில் பறந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் நேற்று அர­சாங்­கக் கட்­ட­டங்­கள் அனைத்­தி­லும் தேசிய கொடி அரைக்­கம்­பத்­தில் பறந்­தது.

கால­மான பிரிட்­ட­னின் இரண்­டாம் எலி­ச­பெத் அர­சி­யா­ருக்கு மரி­யாதை செலுத்­தும் வகை­யில் கொடிகள் அரைக்­கம்­பத்­தில் பறக்­க­வி­டப்­பட்­ட­தாக பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­தார்.

"இன்று இரண்­டா­வது எலி­ச­பெத் அர­சி­யா­ருக்கு உல­கம் பிரி­யா­விடை கொடுக்­கிறது. லண்­ட­னில் அதி­கா­ர­பூர்வ இறு­திச்­ச­டங்கு நடக்­கிறது.

"எலி­ச­பெத் அர­சி­யார் நம்­பிக்கை, நிலைப்­பாடு, தொடர்ச்சி ஆகி­ய­வற்­றின் அடை­யா­ள­மாகத் திகழ்ந்­தார்," என்று ஃபேஸ்புக்­கில் பிர­த­மர் நேற்று குறிப்­பிட்­டார்.

"அர­சி­யார் தனது காலத்தில் உண்­மை­யான வழி­காட்­டி­யா­கத் திகழ்ந்­தார். ஆழ்ந்த கடமை உணர்வு, அர்ப்­ப­ணிப்பு, பிரிட்­ட­னுக்­கும் காமன்­வெல்த் நாடுக­ளுக்­கும் உல­கிற்­கும் ஆற்­றிய தொண்­டு­கள் ஆகி­ய­வற்­றுக்­காக எப்­போ­துமே அவர் நினை­வு­கூ­ரப்­படு­வார்," என்­றும் அவர் குறிப்பிட்டார்.

"பிரிட்­ட­னின் அர­சர் மூன்­றாம் சார்ல்­ஸுக்­கும் அரச குடும்­பத்­தி­ன­ருக்­கும் பிரிட்­டன் பிர­த­மர் லிஸ் டுரு­ஸுக்­கும் பிரிட்­டன் மக்­களுக்கும் நான் என் ஆழ்ந்த இரங்­க­லைத் தெரி­வித்­துக்கொண்­டி­ருக்­கி­றேன். அர­சி­யா­ரின் ஆன்மா சாந்தி ­அடை­யட்­டும்," என்று திரு லீ தெரி­வித்­துள்­ளார்.

இத­னி­டையே, லண்­ட­னில் நேற்று மாலை 6 மணியள­வில் நடந்த அர­சி­யா­ரின் இறுதி பிரியாவிடைச் சடங்­கில் பிரிட்­டன் மக்களும் உல­கத் தலை­வர்­களும் அரச குடும்­பத்­தி­ன­ரும் கலந்­து­கொண்­டனர். இரண்­டாம் எலி­ச­பெத் அர­சி­யார் ஸ்காட்­லாந்­தில் உள்ள பால்­மோ­ரல் அரண்­ம­னை­யில் இம்­மா­தம் 8ஆம் தேதி தமது 96வது வய­தில் மர­ண­மடைந்­தார்.

வாழ்­வின் அனைத்துத் தரப்­பு­களை­யும் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் கடந்த புதன்­கி­ழமை முதல் பல மணி நேர­மாக வரி­சை­யில் காத்­தி­ருந்து அரசியாருக்கு இறு­தி­யஞ்­சலி செலுத்தி வந்­த­னர்.

இத­னி­டையே, சிங்­கப்­பூர் அதிபர் ஹலிமா யாக்­கோப் அர­சி­யா­ரின் இறு­திச்­ச­டங்­கில் கலந்­து­கொள்­வார் என்று வெளி­யு­றவு அமைச்சு கடந்த வெள்­ளிக்­கி­ழமை அறி­வித்தது.

அதி­ப­ரு­டன் அவ­ரின் கண­வரான முகம்­மது அப்­துல்லா அல்­ஹாப்­ஷி­யும் இஸ்­தானா, வெளி­யு­றவு அமைச்­சின் அதி­கா­ரி­களும் அந்­தச் சடங்­கில் கலந்­துகொள்­வார்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

உல­கம் முழு­வ­தி­லும் இருந்­தும் தலை­வர்­களும் அரச குடும்­பத்­தினரும் லண்­டன் சென்று அர­சி­யா­ருக்கு இறுதி மரி­யாதை செலுத்­தி­னர். அவர்­கள் ஞாயிற்­றுக்­கி­ழமை பிரிட்­ட­னின் புதிய மன்­னர் பக்­கிங்­ஹாம் அரண்­ம­னை­யில் அளித்த வர­வேற்பு நிகழ்ச்­சி­யி­லும் கலந்­து­கொண்­ட­னர்.