18,073 முறை நோவா­வேக்ஸ் தடுப்பூசி போடப்பட்டது

18,073 முறை நோவா­வேக்ஸ் தடுப்பூசி போடப்பட்டது

1 mins read
a0eed423-c903-4c5d-8b6c-41a1c2aa3a0e
-

கொவிட்-19க்கு எதி­ரான சிங்­கப்­பூரின் தடுப்­பூசி செயல்­திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக ஆகஸ்ட் 31ஆம் தேதிவாக்­கில் மொத்­தம் 18,073 முறை நோவா­வேக்ஸ் தடுப்­பூசி போடப்­பட்டு இருக்­கிறது.

சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் நேற்று இதனைத் தெரி­வித்­தது. சிங்­கப்­பூ­ரில் கிட்­டத்­தட்ட 16 மில்­லி­யன் முறை கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்டு இருக்­கிறது.

இதில் நோவா­வேக்ஸின் அளவு 0.1% ஆக இருக்­கிறது. நோவா­வேக்ஸ் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பிறகு வேண்­டாத விளை­வு­கள் ஏற்­பட்­ட­தாக தனக்கு 28 புகார்­கள் வந்­தி­ருப்­ப­தாக ஆணை­யம் தெரி­வித்­தது.

ஐந்து பேர் தங்­க­ளுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்­பட்­ட­தாக தெரி­வித்து இருந்­த­னர். இவர்­கள் அனை­வ­ருமே குண­ம­டைந்­து­விட்டனர் என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

நோவா­வேக்ஸ் தடுப்­பூசி கார­ண­மாக இங்கு யாருக்­கும் இத­யத் தசை அழற்சி ஏற்­பட்­ட­தாக தக­வல் இல்லை. நோவா­வேக்ஸ் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் இரண்டு வாரத்­திற்கு கடு­மை­யான உடற்­பயிற்­சி­யில் ஈடு­ப­டக்­கூ­டாது என்று ஆணை­யம் தெரி­வித்துள்ளது.