ஈராண்டுகளுக்குப் பிறகு சிறை நிர்வாகம் தொடர்பில் அனைத்துலக மாநாடு

ஈராண்டுகளுக்குப் பிறகு சிறை நிர்வாகம் தொடர்பில் அனைத்துலக மாநாடு

2 mins read
c1b6f706-1c76-43a9-810d-e7e743ccf714
-

குற்­ற­வா­ளி­க­ளைத் திருத்­தும் நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த அர­சாங்க அமைப்­பு­கள் கருத்­து­க­ளைப் பரி­மா­றிக்­கொள்­வ­தற்­கான அனைத்­து­லக மாநாடு தொடங்­கி­யுள்­ளது. மாநாடு கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வல் கார­ண­மாக ஈராண்­டு­க­ளாக இம்­மா­நாடு நடக்­க­வில்லை.

இந்த ஐந்து நாள் மாநாட்­டில் 21 நாடு­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் மெய்­நி­க­ரில் சந்­திப்­பர். சிறை­யில் ஏற்­படும் அவ­சர நிலை­யைக் கையாள்­வது, குற்­ற­வா­ளி­க­ளின் தேவை­களை மேலும் சிறப்­பா­கப் பூர்த்திசெய்­வது போன்றவற்றைப் பற்றி அதி­கா­ரி­கள் கலந்து பேசுவர்.

சிங்­கப்­பூர் நடத்­தும் இவ்­வாண்­டுக்­கான 'ஏஷி­யன் அண்ட் பசி­பிக் கான்­ஃபி­ரன்ஸ் ஆஃப் கொரெக்­‌ஷ­னல் அட்­மி­னிஸ்ட்­ரேட்­டர்ஸ்' எனும் மாநாட்­டில் பங்­கேற்க 700க்கும் அதி­க­மா­னோர் பதி­வு­செய்­த­னர். ஆஸ்­தி­ரே­லியா, கனடா, சீனா, ஜப்­பான் உள்­ளிட்ட நாடு­க­ளைச் சேர்ந்த பிர­தி­நி­தி­களும் அவர்­களில் அடங்­கு­வர். 'குற்­ற­வா­ளி­க­ளைத் திருத்­தும் நட­வ­டிக்­கை­களில் புதிய எல்­லை­களை வரை­வது' என்­பது இவ்­வாண்டு மாநாட்­டின் கருப்­பொ­ருள். தக­வல்­க­ளைப் பகிர்ந்­து­கொண்டு சிறை நடை­மு­றை­களை மேம்­ப­டுத்­து­வது இலக்கு.

கொள்­ளை­நோய்ப் பர­வ­லின்­போது உல­க­ள­வில் குற்­ற­வா­ளி­களைத் திருத்­தும் முக­வை­கள் சவால்­களை சந்­தித்­ததை மாநாட்­டின் தொடக்க நிகழ்ச்­சி­யில் பேசிய உள்­துறை இரண்­டாம் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ குறிப்­பிட்­டார்.

அதே வேளை­யில், புதிய வழி­களில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கான வாய்ப்­பைக் கொள்­ளை­நோய்ப் பர­வல் அளித்­த­தென்­றும் அவர் கூறி­னார்.

"சிறை­யில் நமது கைதி­க­ளை­யும் ஊழி­யர்­க­ளை­யும் பாது­காப்­பாக வைத்­துக்­கொள்ள நாம் கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ரா­கப் போராட வேண்­டி­யி­ருந்­தது. அப்­ப­டி­யி­ருந்­தும் கூடு­மா­னவரை மறு­வாழ்வுத் திட்­டங்­க­ளுக்கு இடை­யூறு வரு­வ­தைத் தவிர்த்­த­தோடு நேரடி சந்­திப்­பு­க­ளுக்­குத் தற்­கா­லி­கத் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­த­போ­தும் கைதி­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­து­கொண்டே இருக்க வகை­செய்­தோம்," என்று அமைச்­சர் டியோ சொன்­னார்.