போக்குவரத்துக் காவல்துறை அதிரடிப் பிரிவைச் சேர்ந்த சார்ஜென்ட் ஜோயி பங்கின் உயரம் 1.61 மீட்டர், உடல் எடை 53 கிலோகிராம் மட்டுமே. ஆனால், பணியில் இறங்கிவிட்டால் இவர் ஒரு பாயும் புலி.
பெண் போக்குவரத்து காவல்துறை அதிகாரியைப் பார்த்ததில்லை என்று பலர் தன்னிடம் வந்து கூறியிருப்பதாகச் சொல்கிறார் இவர். குறிப்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டும் பெண் அதிகாரியைக் கண்டு பலர் வியந்ததாகக் கூறுகிறார் 10 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையில் சேர்ந்த 34 வயது சார்ஜென்ட் பிங்.
பணியில் இருக்கும்போது இவர் ஓட்டும் மோட்டார் சைக்கிளும் சில வேளைகளில் இவரின் எடையில் ஏழு மடங்கு இருக்க வாய்ப்புள்ளது. இவர் உட்பட 'பிஎம்டபிள்யு ஆர்டி 1250' ரக ராட்சத மோட்டார் கைக்கிளை ஓட்டும் 12 பெண் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சிங்கப்பூரில் இருக்கின்றனர்.

