ஜூரோங் பறவைப் பூங்காவைப் பொழுதுபோக்குப் பசுமை பகுதியாக மாற்ற மரபுடைமை ஆர்வலர்கள் குரல்

1 mins read
d4141388-eccf-4dc0-be81-047aed5522df
ஜூரோங் பறவைப் பூங்கா பறவைகள் மண்டாய்க்கு மாற்றப்படும். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜூரோங் பற­வைப் பூங்கா, அதற்கு அருகே இருக்­கும் ஜூரோங் மலை இரண்­டை­யும் பொழு­து­போக்குப் பசு­மைப் பகு­தி­க­ளாக மாற்றுமாறு மர­பு­டைமை ஆர்­வ­லர்­கள் குரல் எழுப்பியுள்ளனர்.

அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் ஜூரோங் பற­வைப் பூங்­கா­வில் இருக்­கும் பற­வை­கள், மண்­டாய் வன­வி­லங்­குக் காப்­ப­கத்­தில் அமைக்­கப்­படும் 'பெர்ட் பார­டைஸ்' எனும் பற­வைப் பூங்­கா­விற்கு இடம் மாற்­றப்­படும் என்று முன்­ன­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அதைத் தொடர்ந்து ஜூரோங் பற­வைப் பூங்கா, ஜூரோங் மலை ஆகி­யவை இருக்­கும் இடத்தை வருங்­கா­லத்­தில் எவ்­வாறு பயன்­ப­டுத்­து­வது என்­பது குறித்து மர­பு­டைமை ஆர்­வலர்­கள் கருத்துரைத்துள்ளனர்.

இந்த இரு பகு­தி­க­ளின் மொத்தப் பரப்­ப­ளவு 35 ஹெக்­டர். இது, 50 காற்­பந்­துத் திடல்­க­ளின் பரப்­பளவுக்கு சமம்.

இரண்­டை­யும் ஜேடிசி கழகக் குழு­மம் நிர்­வ­கிக்­கிறது.

ஜூரோங் பற­வைப் பூங்கா இருக்­கும் பகு­தி­யின் வருங்­கா­லப் பயன்­பாட்­டுக்­கான திட்­டங்­களை அதி­கா­ரி­கள் இன்­னும் வெளி­யி­ட­வில்லை.

இங்­கி­ருக்­கும் சுமார் 3,500 பற­வை­க­ளு­டன் கிட்­டத்­தட்ட 130 ஊழி­யர்­களும் மண்­டாய்க்கு இடம் மாற்­றப்­ப­டு­வர்.

ஜூரோங் மலை­யில் அமைந்­திருக்­கும் பூங்­கா­விற்­குப் பொது­வாக அதி­க­மா­னோர் வருகை தரு­வதில்லை. ஆனால் இந்­நிலை 2029ஆம் ஆண்டு மாற­லாம்.

அந்த ஆண்டு புதிதாகக் கட்டப்படும் ஜூரோங் வட்­டார பெரு­வி­ரைவு ரயில் பாதை­யில் புதிய ரயில் நிலை­யம் அமை­க்­கப்­ப­ட­வுள்ளது. அந்த ரயில் நிலை­யம் மலைக்­குக் கீழ் அமைந்­திருக்கும்.