போத்தல், கேன் ஆகியவற்றில் விற்கப்படும் பானங்களுக்கு பத்திலிருந்து 20 காசு வரை கூடுதல் கட்டணம் கட்டவேண்டும். இந்த கட்டணம் காலி போத்தல்களையும், கேன்களையும் திருப்பி தரும்போது மீண்டும் பெற்றுகொள்ளலாம். இந்த திட்டம் 2024 நடுபகுதியில் நடப்புக்கு வரும்.
தேசிய சுற்றுப்புற அமைப்பு இன்று இந்த புதிய திட்டத்தை அறிவித்தது. காலி போத்தல்களையும், கேன்களையும் இரண்டு வழிகள் மூலம் திருப்பி தருலாம். அவற்றை சில குறிப்பிட்ட பலபொருள் அங்காடிகளில் திருப்பிதர முடியும் அல்லது அவற்றை தானியக்க இயந்திரங்களில் போட்டுவிட்டு பணத்தை பெற்றுகொள்ளலாம். தீவு முழுவதும் அத்தகைய 400க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் அமைக்கப்படும்.
அதிகமான சிங்கப்பூரர்கள் மறுபயனீடு செய்வதை ஊக்குவிக்க இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.


