ஏர் ஆசியா விமானத்தில் சிக்கிக்கொண்ட பயணிகள்

ஏர் ஆசியா விமானத்தில் சிக்கிக்கொண்ட பயணிகள்

1 mins read
8f383b5e-8fef-4ddc-86d0-aa22eaf23e16
படம்: patch6388/டிக்டாக் -

கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த ஏர் ஆசியா விமான பயணிகள் விமானத்தில் அரை மணிநேரம் வரை சிக்கிக்கொண்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்திலிருந்து பயணிகள் வெளியேற முடியவில்லை.

இந்த சம்பவத்தை ஒளிப்பதிவு செய்து தனது டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் பேட்ரிக் சான் என்பவர். விமானத்தில் இருள் சூழ்ந்திருந்த நிலையில், பலர் விமானத்திலிருந்து வெளியேற நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

செப்டம்பர் 10ஆம் தேதியன்று சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது ஏகே16 ஏர் ஆசியா விமானம். பயணிகள் வெளியேறும் சமயத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இது உடனடியாக சரிசெய்யப்பட்டதாக ஏர் ஆசியா நிறுவனம் கூறியது.