கொலைக் குற்றச்சாட்டில் இருந்து மாது விடுவிப்பு

2 mins read
833a3829-b79a-4bea-8e58-ba1bb6b0b12a
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி கேலாங் லோரோங் 31ல் உள்ள குடியிருப்பு ஒன்றில் கொலை நிகழ்ந்தது. படம்: ஷின்மின் -

மகளைக் கொன்றவருக்கு மனநலப் பிரச்சினை; காலவரையின்றி தடுத்து வைக்கப்படுவார்

தம்­மு­டைய எட்டு வயது மகள் ஒரு தீய சக்தி என்று குரல்­கள் கேட்­ட­தைத் தொடர்ந்து மக­ளின் கழுத்­தி­லும் உட­லி­லும் 76 முறை குத்திக்­கொன்ற மாது, கால­வ­ரை­யின்றி தடுத்து வைக்­கப்­ப­டு­வார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி கேலாங் லோரோங் 31ல் உள்ள ஒரு குடி­யி­ருப்­பில் அச்­சி­று­மியை 36 வயது மாது கொன்­ற­தாக உயர் நீதி­மன்­றம் நேற்று கண்­ட­றிந்­தது.

அந்த மாதுக்கு இளைய மகள் ஒரு­வ­ரும் உள்­ளார். அம்­மூ­வ­ரும் அந்­த வீட்டின் அறை ஒன்­றைப் பகிர்ந்­து­கொண்­ட­னர். அந்த மாதின் மற்ற குடும்ப உறுப்­பி­னர்­களும் அந்­த வீட்டில் வசித்­த­னர்.

அந்த மாதுக்கு மன­ந­லப் பிரச்­சினை இருந்­த­தன் கார­ண­மாக, அவ­ரைக் கொலைக் குற்­றச்­சாட்­டி­லி­ருந்து நீதி­மன்­றம் விடு­வித்­தது.

நீதி­மன்ற உத்­த­ர­வின் கார­ண­மாக அவ­ரது பெயர் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அந்த மாதுக்கு 'ஸ்கிட்­ஸோ­ஃபி­ரீ­னியா' எனும் மன­ந­லப் பிரச்­சினை இருந்­தது கண்­ட­றி­யப்­பட்­டது.

கொலை நிகழ்ந்­த­போது அவர் சரி­யான மன­நி­லை­யில் இல்லை என்­ப­தும் தெரி­ய­வந்­தது.

அந்த மாதின் மன­ந­லப் பிரச்­சி­னைக்கு பல ஆண்­டு­க­ளாக சிகிச்சை அளிக்­கப்­ப­டா­மல் போன­தாக மன­ந­லக் கழ­கம் வெளி­யிட்ட அறிக்­கை­கள் தெரி­வித்­தன.

மன­ந­லப் பிரச்­சினை கார­ண­மாக அவ­ரது சிந்­த­னை­யும் செயல்­களும் குழம்­பிப் போன­தால், கொலை நிகழ்ந்­த­போது எது சரி, எது தவறு என்று அவ­ரால் வேறு­படுத்­திப் பார்க்க முடி­ய­வில்லை என்று அறிக்­கை­கள் கூறின.

அந்த மாதின் காத­லர் 2014ல் சீனா­வுக்­குத் திரும்­பி­விட்­ட­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த மாதுக்கு குரல்­கள் கேட்­கத் தொடங்­கின. காலப்­போக்­கில் அந்தக் குரல்­கள் உரக்­க­மா­க­வும் அடிக்­க­டி­யும் கேட்­கத் தொடங்­கின.

தம்மையும் தம் குடும்­பத்­தா­ரை­யும் காயப்­ப­டுத்­த­வும் தம் மூத்த மகளைக் கொல்­ல­வும் அந்த மாதி­டம் குரல்­கள் கூறின.

இந்­நி­லை­யில், தம் கட்­சிக்­கா­ரர் விரை­வில் குண­ம­டைந்து அவ­ரு­டைய குடும்­பத்­து­டன் ஒன்­றி­ணை­வார் என தாம் நம்­பு­வ­தாக அந்த மாதின் வழக்­க­றி­ஞர் நீதி­மன்­றத்­தில் கூறி­னார்.