கத்தியை வீசி, வயிற்றில் குத்திக்கொண்ட மாது மீது இன்று குற்றஞ்சாட்டப்படும்

2 mins read
0bc96b69-ad23-42c4-b42d-96d3de3b50c0
மாதிடமிருந்து இரு கத்திகள் கைப்பற்றப்பட்டன. படங்கள்: இன்ஸ்டகிராம், சிங்கப்பூர் போலிஸ் படை -

தெம்­ப­னி­சில் உள்ள செயின்ட் ஹில்டாஸ் உயர்­நி­லைப் பள்­ளிக்கு வெளியே காவல்­துறை முற்­று­கை­யின்­போது கத்­தியை வீசி, தம் வயிற்­றில் குத்­திக்­கொண்ட 53 மாது மீது இன்று நீதி­மன்­றத்­தில் குற்­றஞ்­சாட்­டப்­படும்.

பொது இடத்­தில் ஆபத்­தான ஆயு­தங்­களை வைத்­தி­ருந்­த­தாக அவர் மீது குற்­றஞ்­சாட்­டப்­படும்.

தெம்­ப­னிஸ் ஸ்தி­ரீட் 82ல் மாது ஒரு­வர் கத்­தியை வீசி­யது குறித்து காவல்­து­றைக்கு நேற்று மாலை 6.30 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­தது.

செயின்ட் ஹில்டாஸ் உயர்­நிலைப் பள்­ளிக்கு வெளியே அந்த மாதைக் குறைந்­தது 10 காவல்­துறை அதி­கா­ரி­கள் சூழ்ந்­தி­ருந்­ததை இணை­யத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்ட காணொ­ளி­கள் காட்­டின.

அவர்­களில் குறைந்­தது மூன்று அதி­கா­ரி­கள் பாது­காப்­புக் கவசங்­களை அணிந்­தி­ருந்­த­னர்.

"இந்­தச் சம்­ப­வத்­தின்­போது அதி­கா­ரி­கள் மீது அந்த மாது கத்­தியை வீசி­னார். அக்­கத்­தி­யைக் கொண்டு தம் வயிற்­றில் அவர் குத்­திக்­கொண்­டார்.

"கத்­தி­யைக் கீழே போடு­மாறும் அதி­கா­ரி­கள் பல­முறை கூறி­ய­போதும், அதைப் பொருட்­ப­டுத்­தாத அந்த மாது தொடர்ந்து கத்­தியை வீசி­னார். தம் கழுத்­தில் கத்­தியை வைத்து தம்மை மேலும் காயப்­ப­டுத்­திக்­கொள்­ளப் போவ­தாக அவர் மிரட்­டி­னார்," என்று காவல்­துறை நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

அந்த மாது தம்மை மேலும் காயப்­ப­டுத்­திக்­கொள்­வ­தைத் தடுக்க, அதி­கா­ரி­களில் ஒரு­வர் 'டீசர்' துப்­பாக்­கி­யால் அவ­ரைச் சுட்­டார். பின்­னர், அந்த மாது கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்­டார். அவ­ரி­டம் இருந்து இரு கத்­தி­கள் கைப்­பற்­றப்­பட்­டன.

அவர் சாங்கி பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்லப்­பட்­டார்.

போதைப்­பொ­ருள் தொடர்­பான குற்­றங்­கள் புரிந்­த­தன் சந்தே­கத்­தின் பேரில், மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அவ­ரி­டம் விசா­ரணை நடத்­தும்.