மசே நிதி: 2023 வரை 4 விழுக்காடு வட்டி விகிதம்

மசே நிதி: 2023 வரை 4 விழுக்காடு வட்டி விகிதம்

1 mins read
9e8628cc-6597-4509-a3fb-4f62063dbc6f
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மத்­திய சேமநிதி கணக்­கு­க­ளுக்­கான குறைந்­த­பட்ச வட்­டி­வி­கி­தம் 2023 டிசம்­பர் 31வரை நீட்­டிக்­கப்­பட்டுள்ளது. சிறப்பு, மருத்துவக் கணக்கு, ஓய்வுக் கணக்­கு­களில் உள்ள பணத்­திற்குக் குறைந்­த­பட்­சம் 4 விழுக்­காடு வட்டி அடுத்த ஆண்டு இறுதிவரை கிடைக்­கும் என்று மத்­திய சேமநிதிக் கழ­க­மும் வீடமைப்பு வளர்ச்­சிக் கழ­க­மும் தெரி­வித்துள்ளன.

இந்த வட்­டி­வி­கி­தம், இந்த ஆண்டு 31ஆம் தேதி­யு­டன் காலா­வ­தி­யாக இருந்­தது.

55 வயதுக்குக் குறைவான வய­துள்ள மசே நிதி உறுப்­பி­னர்­கள் தங்­கள் சாதாரணக் கணக்­கில் உள்ள மொத்த இருப்­பு தொகைக்கு 5 விழுக்காடு வரை வட்டி பெறு­வார்­கள். சிறப்பு, மருத்து­வச் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்­திற்கு ஆண்­டுக்கு 5 விழுக்காடு வட்டி உண்டு.

55 வயதுக்கும் அதிக வய­துள்ள உறுப்­பி­னர்­க­ளுக்கு அவர்­க­ளின் சாதா­ரண கணக்­கில் உள்ள மொத்த இருப்­பில் முதல் $30,000க்கு ஆண்­டுக்கு 6 விழுக்காடு வட்டி கொடுக்­கப்­படும். அடுத்த $30,000 தொகைக்கு 5 விழுக்காடு வட்டி வழங்­கப்­படும். உறுப்­பி­ன­ரின் சாதா­ரண கணக்­கில் உள்ள பணத்­திற்குக் கிடைக்­கும் கூடு­தல் வட்டி அவர்­களின் சிறப்பு, ஓய்வு கால கணக்­கிற்கு மாற்­றப்­படும்.