வேலையிட மரணங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து 'சேஃப்டி டைம்-அவுட்' எனும் தேவைப்படும்போது தற்காலிகமாக வேலையை நிறுத்தும் நடைமுறை செப்டம்பர் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு அதிகமான ஆபத்து இருக்கும் துறைகள் தங்கள் பாதுகாப்பு நடைமுறைகளை சரிசெய்ய கூடுதல் அவகாசம் பெறும்.
ஏழு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து 15 தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானம், உற்பத்தி, கடல்துறை, போக்குவரத்து போன்ற துறைகளையும் கனரக வாகனங்களை பயன்படுத்தும் துறைகளுக்கும் இந்த புதிய நடவடிக்கை அறிமுகம் செய்யப்பட்டது.
இவ்வாண்டு இதுவரை 37 வேலையிட மரணங்கள் பதிவாகியுள்ளன. சென்ற ஆண்டு முழுவதும் 37 பேர் வேலையிட விபத்துகளில் உயிரிழந்தனர்.

