நாட்டின் முன்னேற்றத்திற்கு நேர்மையே காரணம்

நாட்டின் முன்னேற்றத்திற்கு நேர்மையே காரணம்

2 mins read
3eb5e788-87ee-436f-8fb2-ce16b8f16b84
சிபிஐபியின் ஆரம்பகால அமலாக்க நடவடிக்கைகளின்போது பயன்படுத்தப்பட்ட ஒலிப்பதிவுக் கருவியை நேற்றைய கண்காட்சியில் தலைவர்கள் பார்வையிட்டார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஊழ­லுக்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் வலு­வான நிலைப்­பாடு, அதன் முன்­னேற்­றத்­திற்கு முக்­கி­யக் கார­ணி­யாகும் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் கூறி­னார். துன்­பங்­களை சிங்­கப்­பூர் எதிர்­கொள்­வ­தற்கு அர­சாங்­கத்­தின் மீது பல ஆண்­டு­கால நம்­பிக்­கை­யும் உத­வு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். இஸ்­தானா­வில் நேற்று நடை­பெற்ற லஞ்ச ஊழல் ஒழிப்­புப் பிரி­வின் (சிபி­ஐபி) 70வது ஆண்­டு­நி­றைவு விழா­வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

குற்­ற­மற்ற, நேர்­மை­யான அர­சாங்­கமே நாட்­டின் போட்­டித்­தன்­மையை உணர்த்­தும் மிகப் பெரிய சாதக அம்­ச­மா­கத் திகழ்ந்து வரு­கிறது என்று குறிப்­பிட்ட அவர், வெளிப்­ப­டை­யான,நியா­ய­மான விதி­மு­றை­க­ளால் இங்கு வர்த்­த­கங்­கள் வள­ம­டை­வ­தா­கக் கூறி­னார்.

திறன் தகு­தி­யும் ஆளு­மை­யின் நேர்மை வலி­யு­றுத்­த­லும் இருப்­ப­தால் சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளின் ஆற்­றலை முழு­மை­யாக வெளிப்­படுத்­து­வ­தற்­குச் சம­மான வாய்ப்­பு­கள் உள்­ளன. அதேவேளை, தனிப்­பட்ட ஒரு­வர் மட்­டும் பல­ன­டை­யாது பொது­மக்­கள் பல­ன­டை­யும் வண்­ணம் முடி­வு­களும் கொள்­கை­களும் உறு­தி­யா­கின்­றன என்ற நம்­பிக்­கை­யும் பிறக்­கிறது என்­றார் அவர்.

உல­கி­லேயே ஊழல் குறை­வாக உள்ள நாடு­களில் சிங்­கப்­பூ­ரும் ஒன்று என்று பகிர்ந்­து­கொண்­டார் அதி­பர் ஹலிமா. ஊழலை நிறுத்து­வதற்­கும் தண்­டனை விதிப்­ப­தற்­கும் சிபி­ஐபி அதன் விசா­ர­ணை­களைக் கண்­ணி­யத்­து­டன் முழு­மை­யா­க­வும் அச்­சத்தை விலக்­கி­ய­வா­றும் நடத்­த­வேண்­டும் என்­றார்.

முன்­னோ­டித் தலை­வர்­கள் மிகுந்த சிர­மங்­க­ளுக்கு இடையே நாட்­டின் ஆட்­சி­மு­றை­யில் விதைத்­துள்ள வலு­வான நம்­பிக்­கை­யைப் பாது­காப்­ப­தும் தக்­க­வைத்­துக்­கொள்­வ­தும் இன்­றை­யத் தலை­வர்­கள் மற்­றும் ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ரின் பொறுப்­பா­கும் என்று கூறி­னார்.

"அனை­வ­ரா­லும் பகிர்ந்­து­கொள்­ளப்­படும் இந்­தப் பொறுப்­பில் சிபி­ஐபி முக்­கி­யப் பங்­காற்றி வரு­கிறது, தொடர்ந்து பங்­காற்­றும். அது நம் அர­சாங்­கத் துறை­யின் கண்­ணியத்­தைக் கடுமையாகப் பாது­காக்க வேண்­டும். சிங்­கப்­பூ­ரின் குற்­ற­மற்ற நிலை­யைத் தற்­காத்­திட வேண்­டும்," என்­றார் திரு­வாட்டி ஹலிமா.

இதற்­கி­டையே, அர­சி­யல் தலை­யீடோ பழி­வாங்­கும் அச்­சமோ இன்றி யாரை வேண்­டு­மா­னா­லும் விசா­ரிக்­கும் உரிமை சிபி­ஐ­பிக்கு உண்டு என்று விளக்­கி­னார் அவர்.

நேற்­றைய நிகழ்­வில் 120 பேரு­டன் பிர­த­மர் லீ சியன் லூங், ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்­சர் கோ சோக் டோங் ஆகி­யோ­ரும் கலந்­து­கொண்­ட­னர்.