குறுக்குத் தீவு ரயில் பாதையால் துடிப்புமிக்க மையங்களாகும் ஜூரோங், டர்ஃப் சிட்டி

குறுக்குத் தீவு ரயில் பாதையால் துடிப்புமிக்க மையங்களாகும் ஜூரோங், டர்ஃப் சிட்டி

1 mins read
18d55285-4fdd-4c16-827f-a7798d27d263
-

குறுக்­குத் தீவு ரயில் பாதை­யின் இரண்­டாம் கட்­டம் திறக்­கப்­ப­டும்­போது மேற்கு வட்­டா­ரத்­தில் வசிப்­போ­ருக்­கும் வேலை செய்­வோ­ருக்­கும் அங்கு எதிர்­கா­லத்­தில் குடி­யே­று­வோ­ருக்­கும் நிச்­ச­யம் சாத­க­மான நிலையே காத்­தி­ருக்­கிறது.

மொத்­தம் 15 கிலோ­மீட்­டர் நீள­மு­டைய இந்த ரயில் பாதை­யில் ஆறு நிலை­யங்­கள் அமைந்­தி­ருக்­கும். நன்கு வளர்ச்­சி­ய­டைந்த வீட­மைப்பு மற்­றும் வர்த்­தக மையங்­களான கிள­மெண்டி, வெஸ்ட் கோஸ்ட் மற்­றும் கிங் ஆல்­பர்ட் பார்க்­கில் நிலை­யங்­கள் இருக்­கும்.

மாஜு நிலை­யம் 2032ல் இயங்­கத் தயா­ரா­கும்­போது தற்­போது எம்­ஆர்டி வச­தி­யின்றி உள்ள எஸ்­ஐ­எம் குளோ­பல் எடு­கே­ஷன், சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­கலைக்­க­ழ­கம் மற்­றும் நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி ஆகிய மூன்று உயர்­கல்வி நிலை­யங்­களுக்கு அது வச­தி­யாக அமைந்­தி­டும்.

இதற்­கும் மேலாக, ஜூரோங் லேக் பகுதி, டர்ஃப் சிட்டி ஆகி­ய­வற்­றில் நிலை­யங்­கள் சேவை வழங்­கும். வளர்ச்சி அதி­கம் காணா இடங்­களில் புதிய எம்­ஆர்டி ரயில் பாதை அமைக்­கப்­படும் நிலை­யில் டர்ஃப் சிட்டி, ஜூரோங் லேக் பகுதி ஆகிய இரண்­டுக்­கும் நகர மறுச்­சீ­ர­மைப்பு ஆணை­யம் பெருந்­திட்­டங்­களை வகுத்­துள்­ளது.

இதற்கிடையே, அதிக மக்­கள் இல்­லாத இடங்­களில் புதிய ரயில் பாதை­கள் அமை­வது தவிர்க்க முடி­யாத ஒன்­றா­கி­யுள்­ளது.