நீர்க்கப்படாத நிலையில் தடுப்பூசி செலுத்தியவர் ஓர் இடைக்கால மருத்துவர்

நீர்க்கப்படாத நிலையில் தடுப்பூசி செலுத்தியவர் ஓர் இடைக்கால மருத்துவர்

1 mins read
a7379e04-0bd6-4fb9-8ad1-b64a9cccda73
-

ஹவ்காங் மருந்தகம் ஒன்றில் இருவருக்கு நீர்க்கப்படாத நிலையில் முழுக் குப்பி

கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து, அதைச் செலுத்தியவர் பணியில் சேர்ந்து இரண்டு வாரங்களே ஆகியதாகவும் இடைக்கால ஏற்பாடாக அவர் அங்கு பணியாற்றி வந்தார் என்றும் மருந்தகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. புரோஹெல்த் மெடிக்கல் கிளினிக்@ஹவ்காங் மருந்தகத்தில் அந்தப் பெண் மருத்துவர் இம்மாதம் 1ஆம் தேதி முதல் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. நீர்க்கப்படாத தடுப்பூசி இம்மாதம் 15ஆம் தேதியன்று செலுத்தப்பட்டது.

இதற்கிடையே, இடைக்கால மருத்துவராக அவரின் சேவையை நாடுவதைத் தாங்கள் நிறுத்தி வைத்துள்ளதாக மருந்தகத்தின் பேச்சாளர் தெரிவித்தார். நீர்க்கச் செய்யாத ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை இருவருக்குச் செலுத்தியதை அடுத்து ஒருவருக்குத் தலைவலி ஏற்பட்டதுடன் அவரின் இதயத் துடிப்பு துரிதமானதாகக் கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பிவிட்டார். இரண்டாவது நபருக்கு இதுவரை எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.