ஆயுதங்கள் வைத்திருந்ததாக பெண்மீது குற்றச்சாட்டு

ஆயுதங்கள் வைத்திருந்ததாக பெண்மீது குற்றச்சாட்டு

1 mins read
66882fbb-f3cc-4273-8f7e-a5b23dd546b9
-

தெம்­ப­னி­ஸில் உள்ள செயின்ட் ஹில்டா உயர்­நி­லைப் பள்­ளி­யின் வெளியே பெண் தன்­னைத் தானே கத்­தி­யால் குத்­திக்­கொண்­டார். ஜூலி­யானா அப்­துல் காதிர், 53, எனப்­படும் அவர் பள்­ளிக்­கூ­டத்­திற்கு வெளியே நின்­றி­ருந்­த­போது இரண்டு ஆயு­தங்­க­ளைத் தம்­வ­சம் வைத்­தி­ருந்­த­தாக நேற்று குற்­றம் சாட்­டப்­பட்­டது. திங்­கட்­கி­ழமை மாலை இரு கத்திகளை அப்பெண் வைத்­தி­ருந்­தது பற்றி காவல்­

து­றைக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. இது தொடர்­பாக இணை­யத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்ட காணொ­ளி­யில் குறைந்­த­பட்­சம் 10 காவல்­துறை அதி­கா­ரி­கள் அந்­தப் பெண்­ணைச் சூழ்ந்து இருந்­த­தைக் காண­மு­டிந்­தது. விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்­காத அந்­தப் பெண் தமது அடி­வ­யிற்­றில் தம்­மைத் தாமே குத்­திக்கொண்­ட­தாக காவல்­துறை கூறி­யது. சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­யில் அனு­

ம­திக்­கப்­பட்­ட அவர் மன­ந­லப் பரி­சோ­த­னைக்­காக விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. வழக்கு மீண்­டும் அக்­டோ­பர் 12ஆம் தேதி விசா­ர­ணைக்கு வரும்.