29 முறை கத்தியால் குத்தியதில் காதலி மரணம்: காதலனுக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை

29 முறை கத்தியால் குத்தியதில் காதலி மரணம்: காதலனுக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை

3 mins read
72059878-9fb6-4cb1-82c6-aaf9445b76cf
-

தமது முன்­னாள் காத­லியை நெஞ்­சி­லும் அடி­வ­யிற்­றி­லும் பல­முறை கத்­தி­யால் குத்­திய 37 வயது ஆட­வ­ருக்கு நேற்று நீதி­மன்­றத்­தில் 12 ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. உடல் முழு­வ­தும் 29 இடங்­களில் கத்­திக்­குத்­துக் காயங்­க­ளு­ட­னும் வெட்­டுக் காயங்­

க­ளு­ட­னும் ரத்த வெள்­ளத்­தில் வீழ்ந்த தாம் மீ யோக், 34, என்­னும் அந்­தப் பெண் மாண்­ட­தாக பின்­னர் அறி­விக்­கப்­பட்­டது.

சர­மா­ரி­யா­கக் கத்­தி­யால் குத்­தப்­பட்­ட­தில் அந்­தப் பெண்­ணின் விலா­வில் மூன்று எலும்­பு­மு­றி­வு­கள் ஏற்­பட்­டன. 2021 பிப்­ர­வரி 16ஆம் தேதி நள்­ளி­ர­வுக்­குச் சற்று முன்­னர் ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32ல் உள்ள புளோக் 308ன் வெற்­றுத்­

த­ளத்­தில் சம்­ப­வம் நிகழ்ந்­தது.

இந்­தப் பெண்­ணும் சீனா­வைச் சேர்ந்த ஸெங் சியான் ஃபெங்கும் 2018 டிசம்­பர் மாதம் ஒரு வீட்­டின் வெவ்­வேறு அறை­களில் தங்கி இருந்­த­போது பழ­கத் தொடங்­கி­னர். ஏற்­கெ­னவே மண­மான ஸெங், இங்கு வேறொரு பெண்­ணு­ட­னும் பழக்­கம் வைத்­தி­ருந்­தார்.

அதே­நே­ரம் மலே­சி­ய­ரான திரு­மதி தாம் மண­மு­றிவு பெற்­ற­வர். இவ­ரது நான்கு பிள்­ளை­கள் மலே­சி­யா­வில் வசிக்­கின்­ற­னர். இந்

­நி­லை­யில், இவ­ரு­டன் பழ­கத் தொடங்­கி­ய­தும் ஸெங் தமது மனை­வியை மண­மு­றிவு செய்­தார். 2019 செப்­டம்­பர் முதல் 2020 நவம்­பர் வரை திரு­மதி தாமின் அறையை ஸெங் பகிர்ந்­து­கொண்­டார்.

இதற்­கி­டையே, 2020 நவம்­பர் 17ல் ஸெங்­கை­விட்டு வில­கு­வ­தாக தாம் சொல்­லி­ய­தைத் தொடர்ந்து, ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1ல் உள்ள திறந்­த­வெளி கார் நிறுத்­து­ மி­டத்­தில் இரு­வ­ரும் வாக்­கு­வா­தம் செய்­த­னர். அப்­போது பேனா­க் கத்­தி­யால் தம்­மைத் தாமே குத்­திக்­கொண்ட ஸெங், பின்­னர் திரு­மதி தாமைக் கீழே தள்ளி அவ­ரை­யும் அந்­தக் கத்­தி­யால் வெட் ­டினார். இந்­தக் குற்­றத்­திற்­காக கைது செய்­யப்­பட்ட ஸெங் பின்­னர் பிணை­யில் வெளியே வந்­தார்.

திரு­மதி தாமு­டன் மீண்­டும் பழக பல­முறை முயன்ற இவர், அந்­தப் பெண்­ணின் கைபே­சி­யில் வேறோர் ஆட­வ­ரின் குறுந்­த­க­வ­லைக் கண்டு சின­முற்­றார். அந்­தக் கைபே­சியை உடைத்து நொறுக்­கி­னார். 2021 பிப்­ர­வரி 16ஆம் தேதி இரவு தமது மீதான வழக்­கை­யும் காத­லி­யின் வேறொரு தொடர்­பை­யும் எண்ணி குடிக்­கத் தொடங்­கி­னார்.

திரு­மதி தாம் தங்­கி­யி­ருந்த புளோக்­கிற்கு அன்று இரவு 10 மணி­ய­ள­வில் சென்று அந்­தப் பெண்­ணின் வரு­கைக்­கா­கக் காத்­தி­ருந்­தார்.

அப்­போது தொடர்ந்து குடித்­துக் கொண்டு இருந்­தார். வந்­த­தும் அந்­தப் பெண்ணை நோக்கி ஸெங் வேக­மா­கச் சென்­றார். அந்­தப் பெண் பின்­வாங்கி ஓடி­னார். துரத்­திச் சென்ற ஸெங் மறைத்து வைத்­தி­ருந்த கத்­தியை எடுத்து அந்­தப் பெண்ணை சர­மா­ரி­யாக் குத்­தி­னார்.

அப்­பெண் கீழே விழுந்த பின்­ன­ரும் தொடர்ந்து கத்­தி­யால் குத்­திக் கொண்­டி­ருந்­தார் ஸெங். அங்­கி­ருந்த ஓர் இளை­யர் தமது தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னத்­தால் மோதி அவ­ரைத் தடுக்க முயன்­றும் அதற்­குப் பல­னில்லை. இங் டெங் ஃபோங் மருத்­து­வ­ம­னை­யில் அனு ­ம­திக்­கப்­பட்ட அந்­தப் பெண் மாண்­டு­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

ஸெங் மீது தொடக்­கத்­தில் கொலைக் குற்­றம் சுமத்தப்பட்டது. ஆயி­னும், கடு­மை­யான மன­அ­ழுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்ட அவர் தாம் செய்­வது என்­ன­வென்று அறி­யாத நிலை­யில் இருந்­த­தாக மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில் தெரியவந்­தது.

அத­னைத் தொடர்ந்து, இந்த வழக்கு நோக்­க­மில்லா மர­ணம் என்று வகைப்­ப­டுத்­தப்­பட்­டது.