முழு நேர தேசிய சேவையாளர்கள் இனி இணையம்வழி நடத்தப்படும் 75,000க்கும் மேற்பட்ட பாடங்களை இலவசமாக மேற்கொள்ளப் புதிய தளம் உருவாக்கப்படவுள்ளது.
தேசிய சேவைக்குப் பிறகு வேலைக்குச் செல்லவோ கல்வி மேற்கொள்ளவோ முழுநேர தேசிய சேவையாளர்களுக்கு உதவ இந்தத் தளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து புதிய தளம் நடப்புக்கு வரும்.
தேசிய சேவை ஆற்றும்போது முழுநேர தேசிய சேவையாளர்கள் பாடங்களை மேற்கொள்ள புதிய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு பாடங்களை மேற்கொள்வதற்கான கணக்கு உருவாக்கப்படும்.
அதில் உள்ள சுமார் 135 பிரிவுகளுக்குக்கீழ் உள்ள பாடங்களை முழுநேர தேசிய சேவையாளர்கள் மேற்கொள்ளலாம்.
தற்போது செயல்பாட்டில் இருக்கும் 'ஈ-பிரெப்' தளத்திற்குப் பதிலாக 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்@என்எஸ் லெர்னிங் இஎக்ஸ்பீரியன்ஸ்' எனும் அந்தத் தளம் இடம்பெறும்.
3,000க்கும் அதிகமான பாடங்களைக் கொண்ட 'ஈ-பிரெப்' 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

