கொவிட்-19 கிருமிக்கு எதிரான தடுப்பாற்றலை அறிய விரைவு ரத்தப் பரிசோதனை முறை

கொவிட்-19 கிருமிக்கு எதிரான தடுப்பாற்றலை அறிய விரைவு ரத்தப் பரிசோதனை முறை

1 mins read
5756528e-8d08-417e-a817-cb4598c5ac44
இந்தப் பரிசோதனை முறையின் மூலம் 10 நிமிடங்களில் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம். -

கொவிட்-19 கிருமியின் பல்வேறு வகைகளுக்கு எதிரான தடுப்பாற்றல் ஒருவருக்கு உள்ளதா என்பதைக் கண்டறியும் புதிய ரத்தப் பரிசோதனை முறை சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதற்கு, விரலைக் குத்தி ரத்தத்தைப் பரிசோதித்தால் போதும்.

பத்தே நிமிடங்களில் பரிசோதனை முடிவுகள் தெரிந்துவிடும்.

தற்போது ஆய்வுக்கூடச் சோதனைகளின்வழி ஒருவருக்கு கொவிட்-19 கிருமிக்கு எதிரான தடுப்பாற்றல் உள்ளதா என்பது தெரிந்துகொள்ளமுடியும்.

ஆய்வு முடிவுகள் தெரிவதற்கு 24லிருந்து 72 மணிநேரம் வரை ஆகலாம்.

மேலும், ஆய்வு முடிவுகள் 93 விழுக்காடு சரியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

ஆய்வுத் தொழில்நுட்பத்துக்கான 'ஸ்மார்ட்' எனும் சிங்கப்பூர்-எம்ஐடி கூட்டணி, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் புதிய ரத்தப் பரிசோதனை முறையை உருவாக்கியுள்ளனர்.

ஸ்மார்ட்' அமைப்பு, அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் நடத்திவரும் ஆய்வு நிறுவனமாகும்.

முதன்முதலில் உருவான கொவிட்-19 கிருமி, அதன் டெல்டா, ஓமிக்ரான் வகைகள் போன்றவற்றை உண்டாக்கும் சார்ஸ்-சிஓவி2 கிருமியை செயலிழக்கச் செய்யும் ஆற்றல் உடலில் எந்த அளவுக்கு உள்ளது என்பது புதிய முறை கண்டறியும்.

வருங்காலத்தில் வேறு வகைக் கிருமிகளுக்கும் வேறு நோய்களுக்கும் எதிரான தடுப்பாற்றலைத் தெரிந்துகொள்ள இப்புதிய பரிசோதனை முறையை மாற்றி அமைக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

'மைக்ரோபயோலஜி ஸ்பெக்ட்ரம்' எனும் அறிவியல் ஆய்விதழில் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதியன்று இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. .