ஈசூனில் உள்ள 'நார்த்பாய்ண்ட் சிட்டி' கடைத்தொகுதியில் இருக்கும் 'மலேசியா சியாக்' உணவு நிலையம் இயங்குவதற்கு இரண்டு வாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பூச்சிகள் அல்லது விலங்குகள் அங்கு புழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது தடை விதிக்கப்படதற்கான காரணம்.
அக்டோபர் மாதம் நான்காம் தேதிவரை தடை நீடிக்கும்.
சிங்கப்பூர் உணவு அமைப்பு தடை விதித்தது.
என்ன வகை புச்சிகள் அல்லது விலங்குகள் புழங்கின என்பது தொடர்பிலான விவரங்களை அமைப்பு வெளியிடவில்லை.

