கள்ளச் செயலியின் பதிவிறக்கம்: புதிய கிருமி ஆபத்து

கள்ளச் செயலியின் பதிவிறக்கம்: புதிய கிருமி ஆபத்து

1 mins read
f80e3e64-073b-4e9e-a264-c0f885ca5483
-
Google News Preferred Icon

இணையத்தைப் பயன்படுத்துவோர், குறிப்பாக கூகல் குரோம் தேடு தளத்தைப் பயன்படுத்துவோர், சட்டவிரோதமாக விளையாட்டு காணொளிகளையும் இதர மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்யும்போது இனிமேல் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

அப்படி சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்யும்போது புதிய ஒரு கிருமி கணினிக்குள் புகுந்துவிடும். மோசடிப்பேர்வழிகள் தகவல்களை எல்லாம் திருடிவிடுவார்கள். அல்லது கணினி செயல்படாமல் கெடுத்துவிடுவார்கள் என்று மென்பொருள் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை நேற்றுமுன்தினம் இந்த எச்சரிக்கையை விடுத்தது.

இத்தகைய கணினிக் கிருமிகள், விளம்பரங்கள் வழியாக ஐஎஸ்ஓ, டிஎம்ஜி கோப்புகள் மூலம் பரப்பப்படுவதாக இந்த முகவையின் சிங்கப்பூர் கணினி அவசர உதவிக் குழு தெரிவித்தது.