பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய சில துறைகளுக்கு 30ஆம் தேதி வரை அவகாசம்

பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய சில துறைகளுக்கு 30ஆம் தேதி வரை அவகாசம்

1 mins read
7cfb82c9-dcb3-42ee-9f31-d503b193ab84
அதிக ஆபத்துள்ள துறைகளில் உள்ள நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்வதற்கான கால அவகாசத்தை மனிதவள அமைச்சு வரும் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ் -

அதிக ஆபத்­துள்ள துறை­களில் உள்ள நிறு­வ­னங்­கள் தங்­க­ளது பாது­காப்பு நடை­மு­றை­களை மறு­ஆய்வு செய்ய கூடு­தல் கால அவ­கா­சம் வழங்­கப்­படும். அவற்­றுக்­கான பாது­காப்பு பணி­நி­றுத்த அவ­கா­சம் வரும் 30ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­படும்.

இந்த நிறு­வ­னங்­கள், செப்­டம்­பர் 1ஆம் தேதி­யி­லி­ருந்து 15ஆம் தேதி வரை கட்­டா­யம் பணி­களை நிறுத்தி பாது­காப்பு நடை­மு­றை­களை மறு­ஆய்வு செய்ய வேண்­டும் என்று மனி­த­வள அமைச்சு கூறி­யி­ருந்­தது.

இப்­போது, வரும் 30ஆம் தேதிக்­குள் அவை பாது­காப்பு நடை­ முறை­களை மறு­ஆய்வு செய்­வ­தற்­கான பட்­டி­யலை முடித்­தாக வேண்­டும். மனி­த­வள அமைச்சு நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ள மேம்­பட்ட பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளின் ஒரு பகுதி இது.

கட்­டு­மா­னம், உற்­பத்தி, கடற்­துறை, செய்­முறை, போக்­கு­வ­ரத்து, கிடங்கு ஆகிய துறை­களில் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்­கும் லாரி­கள், பாரந்­தூக்­கி­கள் போன்ற கன­ரக வாக­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் துறை­க­ளுக்­கும் இந்த விதி­முறை பொருந்­தும்.

கூடு­தல் அவ­கா­சம் முடிந்­த­ வுடன் நிறு­வ­னங்­கள் பாது­காப்பு விதி­மு­றை­கள் கடைப்­பி­டிப்­பதை உறு­தி­செய்ய மனி­த­வள அமைச்சு சோத­னை­கள் நடத்­தும். பாது­காப்பு நடை­மு­றை­களை மறு­ஆய்வு செய்­யாத நிறு­வ­னங்­கள் மீது அமைச்சு நட­வ­டிக்கை எடுக்­கும்.