கிரேஸ் ஃபூ: ஐக்கிய நாட்டு 'சிஓபி27' பசுமை மாநாட்டில் இவ்வாண்டு தேக்கம் ஏற்படலாம் உலகளாவிய குழப்பத்தால் பசுமை இலக்குகளுக்கு சிக்கல்

கிரேஸ் ஃபூ: ஐக்கிய நாட்டு 'சிஓபி27' பசுமை மாநாட்டில் இவ்வாண்டு தேக்கம் ஏற்படலாம் உலகளாவிய குழப்பத்தால் பசுமை இலக்குகளுக்கு சிக்கல்

2 mins read
8c4abb29-5db6-40ff-84c6-26b84ee183b9
மனிதர்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இருந்துகொண்டுதான் இருக்கும். அவற்றை எப்படி குறைத்து கட்டுக்குள் வைக்கலாம் என்பதே கேள்வி. - கிரேஸ் ஃபூ, நீடித்த, நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் -

ஐக்­கிய நாட்டு அமைப்­பின் இவ்­வாண்டு பரு­வ­நிலை மாற்ற மாநாட்­டில் (சிஓபி27) பசுமை இலக்­கு­களை எட்­டு­வ­தற்கு, நாடு­களை ஊக்­கு­விப்­ப­தில் முக்­கிய பங்கை ஆற்­று­வது சிங்­கப்­பூ­ருக்­குக் கடி­ன­மாக இருக்­கும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ கூறி­யுள்­ளார்.

அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடையே அதி­க­ரித்து வரும் பதற்­ற­நிலை, ரஷ்­யா­வுக்­கும் உக்­ரே­னுக்­கும் இடை­யி­லான போரால் ஐரோப்­பா­வில் நில­வும் எரி­சக்தி நெருக்­கடி போன்­ற­வற்றை திரு­வாட்டி ஃபூ அதற்­குக் கார­ண­மா­கச் சுட்­டி­னார்.

தேசிய இளை­யர் மன்­றம் ஏற்­பாடு செய்த தேசிய இளை­யர் கலந்­து­ரை­யா­ட­லில் திரு­வாட்டி ஃபூ நேற்று முன்­தி­னம் பேசி­னார். கரிம வெளியேற்றம் அறவே இல்லாத எதிர்காலத்தை நோக்கி எனும் தலைப்­பில் கலந்துரையாடல் இடம் பெற்றது.

சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­பில் தொடர்ந்து கவ­னம் வேண்­டும் என்­றும் பசுமை முயற்­சி­களை அதி­க­ரிக்க வேண்­டும் என்­றும் மற்ற நாடு­க­ளுக்கு நினை­வூட்ட தம்­மால் முடிந்­த­வரை முயற்சி செய்­யப் போவ­தாக திரு­வாட்டி ஃபூ கூறி­னார்.

"ஆனால் சிஓபி27 மாநாடு அவ்­வ­ளவு எளி­தாக இருக்­காது என்­பதே என் அனு­மா­னம்," என்­றார் திரு­வாட்டி ஃபூ.

இருப்­பி­னும், சிங்­கப்­பூர் பசுமை திட்­டத்­தில்' உள்ள இலக்­கு­களை எட்ட அரசாங்கம் முழு­மை­யா­கக் கடப்­பாடு கொண்­டுள்­ள­தாக அமைச்­சர் கூறி­னார். வரும் 2050ல் சிங்­கப்­பூ­ரில் கரி­ம வெளி­யேற்­றத்­தைக் குறைத்து அதை அகற்றுவது அத்­திட்­டத்­தின் இலக்­கா­கும்.

உல­கில் பரு­வ­நிலை மாற்­றத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் முயற்­சி­களில் சிங்­கப்­பூ­ரின் ஆக்­க­க­ர­மான செல்­வாக்கை அதி­க­ரிப்­பது பற்­றிய கேள்­விக்கு அமைச்­சர் பதில் அளித்­தார்.

சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு பற்­றிய அக்­கறை உள்­ள­வர்­கள் உள்­ளிட்ட சுமார் 100 பேர் நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்­ட­னர்.

மற்ற நாடு­க­ளுக்கு பாதிப்­பில்­லா­மல் சிங்­கப்­பூர் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு அதி­கக் கேடு ஏற்­ப­டுத்­தாத எரி­சக்­திக்கு மாற­லாம் என்­றும் நிகழ்ச்­சி­யில் கேட்­கப்­பட்­டது.

கலந்­து­ரை­யா­ட­லில் கலந்­து­கொண்ட மற்ற பேச்­சா­ளர்­களில் ஒரு­வ­ரான சிங்­கப்­பூர் தேசிய பல் ­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர் மெலிசா லோ, சிங்­கப்­பூர் லாவோ­சி­லி­ருந்து நீர் எரி­சக்­தியை இறக்­கு­மதி செய்­கிறது என்பதைச் சுட்டினார்.

இது­போன்ற திட்­டங்­கள் சுற்­றுச்­சூ­ழல் கேட்டை ஏற்­ப­டுத்­த­லாம் என்­றும் நீர் அணை­க­ளுக்கு அரு­கி­லான காடு­கள் அழிக்­கப்­ப­ட­லாம் என்­றும் அவர் கூறினார். அதற்கு பதில் அளித்த அமைச்­சர், எல்லா மனித நட­வ­டிக்­கை­க­ளா­லும் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஏதா­வது பாதிப்பு ஏற்­ப­டு­வ­தா­கக் குறிப்பிட்டார்.

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு நல்­லது என்று கூறப்­படும் மின்­வா­க­னங்­களில்கூட வளங்­களை அதி­கம் பயன்­ப­டுத்­தும் மின்­க­லங்­க­ள் உள்ளதை அவர் சுட்­டி­னார்.

மனி­தர்­க­ளால் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு பாதிப்பு இருந்­து­கொண்­டு­தான் இருக்­கும். அதை எப்­ப­டிக் குறைத்து மட்­டுப்­ப­டுத்­து­வது என்­பதே கேள்வி என்று திரு­வாட்டி ஃபூ கூறி­னார்.

ஒரு­வ­ரது தனிப்­பட்ட பழக்­க­ வழக்­கங்­களை மாற்­ற­லாம் என்று திரு­வாட்டி ஃபூ பரிந்­து­ரைத்­தார்.

தேவை இல்­லா­த­வற்றை வாங்கு­ வ­தைத் தவிர்ப்­ப­து­டன் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஏது­வான பொருள்­களை வாங்­க­லாம் என்­றார் அவர்.