போதைப் புழக்கத்திற்கு எதிராக டிக்டாக் தொடர்

போதைப் புழக்கத்திற்கு எதிராக டிக்டாக் தொடர்

2 mins read
bb0a1ee9-8acf-48a5-8915-febc55df4ab9
போதைப் புழக்கத்திற்கு எதிரான தேசிய மன்றம், 'ஆர்கிடெக்ட்ஸ் ஆஃப் லைஃப்' ஆகியவற்றுக்கு இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இதில் கலந்துகொண்ட மன்றத்தின் துணைத் தலைவர் டாக்டர் சியூ துவான் சியோங் (இடம்), 'ஆர்கிடெக்ட்ஸ் ஆஃப் லைஃப்' அமைப்பின் கிளென் லிம் கென் நியன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அனுஷா செல்வமணி

போதைப் புழக்கத்திற்கு எதிரான தேசிய மன்றம், போதைப் புழக்கத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த "வாட்'ஸ் யுவர் ஃபிக்ஸ்" (What's Your Fix?) எனும் ஈராண்டு இயக்கம் ஒன்றை தொடங்க உள்ளது.

இயக்கத்தின் சிறப்பு அம்சமாக 'ஃபைண்டிங் ஜூலியானா' (Finding Juliana) என்ற தலைப்பில் முதல் முறையாக டிக் டாக் சமூக ஊடகத் தளத்தில் இளம் கதாபாத்திரங்கள் நடித்த தொடர் ஒன்று காட்சிப்பெறும்.

இதற்கு முன்னர் 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "ஹை" (HIGH) எனும் குறும்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவ் வாண்டு புதிதாக இவ்வியக்கம் செயல்படவுள்ளது.

இளம் பெண் ஒருவர் தன் நண்பர்களின் ஆதரவு கிடைக்காத தால், வாழ்க்கையின் இன்னல்களை எதிர்க்கொள்ள போதைப் பொரு ளுக்கு அடிமையாகி விடுகிறார்.

திடீரென்று ஒரு நாள் காணாமல் போகும்போது, அவள் நண்பர்கள் வெறித்தனமாக அவளைத் தேடும் பணியில் இறங்குகிறார்கள்.

இதை முன்கூட்டியே அறிந் திருந்தால், தன் தோழியைக் காப்பாற்றிருக்கலாம் என்று வருந்தும் நண்பர்களை மையமாக கொண்டுள்ளது இத்தொடர்.

நம் சமூ­கம், குறிப்­பாக இளை­யர்­கள் இதற்கு முற்­பட்டு போதைப்­பொ­ருள் தாக்­கத்­திற்கு எளி­தில் அடி­மை­யா­வோரை அதி­லி­ருந்து மீண்டு வர உத­வ­வேண்­டும் என்­பது இந்த இயக்­கத்­தின் முக்­கிய நோக்­க­மா­கும் என்று போதைப் புழக்­கத்­திற்கு எதி­ரான தேசிய மன்­றத்­தின் துணைத் தலை­வர் டாக்­டர் சியூ துவான் சியோங் பகிர்ந்­துக்­கொண்­டார்.

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வின் 2021 கணக்­கெ­டுப்­பின்­படி முதன்­முறை போதைப்­ புழங்கி­களில் பெரும்­பான்­மை­யி­னர் இளை­யர்­கள் என்று குறிப்­பிட்­டுள்­ளது.

ஐந்­தில் மூன்று புழங்­கி­கள் 30 வய­துக்­கும் கீழா­ன­வர்­கள்.

முதன்­மு­றை­யா­கப் போதைப் ­பொ­ருள் புழங்­கி­ய­தற்­காக 2021ஆம் ஆண்­டில் 30 வய­துக்­கும் குறை­வான 561 பேர் கைது­ செய்­யப்­பட்­ட­னர். சென்ற ஆண்டு இந்­தக் குற்­றத்­தைப் புரிந்­த­வர்­களில் இது 60 விழுக்­கா­டா­கும்.

'ஃபைண்டிங் ஜூலி­யானா' தொட­ரின் விளம்­ப­ரக்காட்சி செப்­டம்­பர் மாதம் 23ஆம் தேதி­யி­லி­ருந்து 28ஆம் தேதி வரை டிக்டாக் தளத்­தில் முத­லில் வெளி­யி­டப்­படும்.

அக்­டோ­பர் மாதம் 2ஆம் தேதி­யி­லி­ருந்து 11ஆம் தேதி வரை பொது­மக்­கள் தொட­ரைக் காண­லாம். டிக்டாக்­கின் நேர­டிக் காண­லை­யில் அக்­டோ­பர் 15ஆம் தேதி இரவு 8 மணிக்கு அத்­தொ­டர் முடி­வு­பெ­றும்.

பார்­வை­யா­ளர்­கள் தொட­ரைப் பார்த்­துக்­கொண்டே மெய்­நி­கர் வழி­யாக டிக்டாக்­கில் பல நட­வ­டிக்­கை­களில் கலந்­துக்­கொள்­ள­ளாம்.

'வாட்'ஸ் யுவர் ஃபிக்ஸ்' இயக்­கத்­தைப் பற்­றிய மேல் விவ­ரங்­க­ளுக்கு https://whatsyourfix.sg இணை­யத் தளத்தை நாட­லாம்.