கத்தியால் குத்தி மரணம் விளைவித்தவருக்கு ஆயுள் தண்டனை

கத்தியால் குத்தி மரணம் விளைவித்தவருக்கு ஆயுள் தண்டனை

2 mins read
95edb83d-6137-45e1-8d33-86f240a689f2
-

கத்­தி­யால் பல­முறை குத்தி மர­ணம் விளை­வித்த நப­ருக்கு நேற்று ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

பிடோக் ரிசர்­வோர் வீட்­டில் தன்­னு­டன் தங்­கி­யி­ருந்­த­வ­ரு­டன் வாக்­கு­வா­தம் மூண்­ட­போது அவரை 51 வயது நைய்ங் லின் ஐந்து முறை கத்­தி­யால் குத்­தி­விட்டு வெளி­யேறி­ விட்­டார்.

மியன்­மார் நாட்­டைச் சேர்ந்த அவர், மறு­நாள் நண்­ப­ரு­டன் வீட்டுக்­குத் திரும்­பி­னார். சன்­னல் வழி­யாக அவர் பார்த்­த­போது அறை­யில் இருந்­த­வர் அசை­வற்­றுக் கிடந்­தார். இத­னால் காவல் நிலை­யத்­தில் அவர் சரண் அடைந்­தார்.

இந்த வழக்­கில் அவர் மீது மர­ணம் விளை­விக்­கும் வகை­யில் கத்­தி­யால் குத்­திக் கொலை செய்­த­தாக குற்­றம் சாட்­டப்­பட்­டது.

அவ­ரு­டன் அறை­யில் தங்­கி­யி­ருந்­த­வ­ரின் பெயர் மியோ கியாவ் து. 2021ஆம் ஆண்டு ஏப்­ரல் 2ஆம் தேதி மாலை ஆறு மணி­ய­ள­வில் இரு­வ­ருக்­கும் இடையே வாக்­கு­ வா­தம் மூண்­டது.

அப்­போது நைங் அவரை கத்­தி­யால் குத்­தி­விட்­டார்.

மர­ணத்தை ஏற்­ப­டுத்­தும் நோக்­கத்­தோடு காயம் விளை­வித்த கொலைக் குற்­றச்­சாட்­டுக்கு மரண தண்­டனை விதிப்­பது வழக்­கம்.

ஆனால் நைய்ங் லின்­னுக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இதனை அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர்­கள் எதிர்க்­க­வில்லை.

நைய்ங் லின்­னுக்கு 50 வய­தாகி­ விட்­ட­தால் பிரம்­படி தண்­ட­னை­யி­லி­ருந்­தும் தப்­பி­னார்.

சிங்­கப்­பூ­ரில் மூத்த தொழில்­நுட்­ப­ராக பணி­யாற்­றி­விட்­டுச் சென்ற மியோ கியாவ், குறு­கிய கால விசா­வில் சிங்­கப்­பூர் திரும்பி நைங் லின்­னு­டன் ஒரே அறை­யில் தங்­கி­னார்.

சம்­ப­வத்­தன்று நைய்ங் லின் வேலை முடிந்­த­பி­றகு நண்­பர்­க­ளு­டன் குடிக்­கச் சென்­றார்.

அவர், வீடு திரும்­பி­ய­தும் மியோ கியாவ் து கேள்வி கேட்­ட­தால் வாக்­கு­வா­தம் மூண்­டது.

இதில் ஆத்­தி­ர­ம­டைந்த நைங் லின் அவரை கத்­தி­யால் குத்­தி­விட்­டார்.