செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
3f6dfe21-f29d-440e-9e49-cc19ea9b2cf8
-
Google News Preferred Icon

அதிகாரிகள் சேர்ப்பை ஆராயும்

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு

சிங்கப்பூரின் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி) தனது அதிகாரிகளுக்கான சேவை திட்டத்தை ஆராய்ந்து வருகிறது. சிறப்பான வகையில் அதிகாரிகளை பணிய மர்த்துவதும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை தக்க வைத்துக்கொள்வதும் ஆய்வின் இலக்குகளாகும்.

புதன்கிழமை அன்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் 70வது ஆண்டு விழாவில் பேசிய அதிபர் ஹலிமா யாக்கோப் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

பொதுச்சேவைக்கு இணையாக தங்களுடைய அதிகாரிகளின் ஓய்வு வயதை மாற்றியமைப்பது, அதிகாரிகளின் நிபுணத்துவ ஆற்றலை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வில் பரிசீலிக்கப்படும்.

தற்போது சிபிஐபி அதிகாரிகளின் ஓய்வு வயது 56ஆக உள்ளது. ஆனால் பொதுச்சேவை அதிகாரிகளுக்கான ஓய்வு வயது 63ஆக இருக்கிறது.

சிபிஐபி தனது செயல்திறனை மேம்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்தி வருகிறது. பொது மக்களிடமிருந்து வரும் ஊழல் புகார்களை நிர்வகிப் பதற்காக கடந்த ஜூலையிலிருந்து புதிய தளம் ஒன்றையும் அது உருவாக்கி வருகிறது. புகார்களை நிர்வகிக்கும் 'கமாண்ட்' எனும் மின்னிலக்கத் தளம் விரைவில் நடைமுறைக்கு வருவதை எதிர்பார்க்கலாம்.

மோசடி சம்பவங்கள் அதிகரிப்பு

சிங்கப்பூரில் வழக்கமான குற்றச்செயல்கள் குறைந்து வந்தாலும் ஏமாற்றி, மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2021ஆம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 24,000 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இது, 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 53 விழுக்காடு அதிகமாகும். எல்லை தாண்டிய கும்பல்களின் இணையத் தளங்கள் வழியாக பெரும்பாலான மோசடிகள் நடந்துள்ளன.

உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம் இதனை தெரிவித்தார். புதன்கிழமை நடைபெற்ற 16வது ஆசியான் எல்லை தாண்டிய குற்றச்செயல் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

கடந்த ஜூலையிலிருந்து ஆகஸ்ட் வரையில் பல்வேறு வட்டாரங்களில் செயல்பட்ட மோசடிக் கும்பலைச் சேர்ந்த 13 பேரை சிங்கப்பூர், மலேசிய காவல்துறையினர் இணைந்து செயல்பட்டு கைது செய்ததை அவர் சுட்டிக்காட்டினார். இந்த மோசடிக் கும்பல்கள் சிங்கப்பூரில் உள்ள 60க்கும் மேற்பட்டவர்களுக்கு குறி வைத்தது. இதில் சிக்கியோர் 1.3 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழந்துள்ளனர்். மோசடி நபர்கள் பிடிபட்டாலும் பாதிக்கப்பட்டவர்களின் துயரம் தீரவில்லை என்றார் ஃபைஷால் இப்ராஹிம்.

அரசியல்வாதிகள், அரசியல்

கட்சிகள் நிதி திரட்ட தடை

'டிக்டாக்' நிர்வாகம், அதன் செயலி வழியாக அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் நிதித் திரட்டுவதை தடை செய்துள்ளது. குறுகிய காணொளி பகிர்வு மூலம் தவறான தகவல்கள் பரப்புவதையும் ஒரு சார்பு முடிவு எடுப்பதையும் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. விளம்பரம் மற்றும் பொருள் விற்பனை மூலம் அவர்கள் நிதித் திரட்டவும் டிக்டாக் தடை விதித்துள்ளது.

இந்தப் புதிய மாற்றத்தினால் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் டிக்டாக்கின் பணமாக்கும் அம்சங்களைப் பயன்படுத்தி பணத்தைப் பெறவோ கொடுக்கவோ முடியாது என்று டிக்டாக் இணையத் தளம் தெரிவித்தது,