அல்ஜுனிட் வட்டாரத்தில் ஓர் 55 வயது ஆடவர் தமது வேனில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
வேனின் இயந்திரம் அப்போது வெறுமனே இயங்கிக் கொண்டிருந்தது.
கடந்த 21ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 3.20 மணி அளவில், பிளோக் 119 அல்ஜுனிட் அவென்யூ 2ல் உள்ள திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
ஷின் மின் செய்தித்தாள் இத்தகவலைத் தெரிவித்தது.
இறந்தவர், செய்தித்தாள் விநியோகிப்பாளர் ஆவார்.
அங்கிருந்த கடைக்காரர் ஒருவர், அந்தச் செய்தித்தாள் விநியோகிப்பாளர் புதன்கிழமை காலை தமது கடைக்கு அருகே வேனை நிறுத்தியதாக கூறினார்.
மாண்டவர் ஓரிரண்டு ஆண்டுகளாக அங்கிருந்த வர்த்தகங்களுக்கு செய்தித்தாள்களை விநியோகித்து வந்தார் என்றும் கடைக்காரர் சொன்னார்.
பின்னர், பக்கத்தில் இருந்த வேறு ஒரு கடையின் நிர்வாகி, வேனின் இயந்திரப் பொறியும் குளிர் சாதனமும் ஓடிக் கொண்டிருந்ததை அறிந்தவுடன் அங்கு சென்றார்.
தொடர்புடைய செய்திகள்
ஆடவர் பேச்சுமூச்சின்றி இருந்தது தெரிய வந்தது.
மாண்ட ஆடவரின் மனைவி அங்கு வந்த சற்று நேரத்துக்குள் காவல்துறையினரும் வந்துவிட்டதாக அக்கம்பக்கம் இருந்தவர்கள் கூறினர்.
ஆடவர், அன்று காலையில் செய்தித்தாள்களைக் கடையில் விநியோகிக்கவில்லை என்று கூறப்பட்டது.


