ஆசியாவின் தலைசிறந்த நிதி மையமாக உயர்ந்த சிங்கப்பூர்

ஆசியாவின் தலைசிறந்த நிதி மையமாக உயர்ந்த சிங்கப்பூர்

1 mins read
559f1aa5-05f1-4193-9a07-be320c35354d
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர், ஹாங்காங்கை மிஞ்சி, ஆசியாவின் தலைசிறந்த நிதி மையமாக உயர்ந்துள்ளது.

மேலும் அது உலகின் மூன்றாவது தலைசிறந்த நிதி மையமாக முன்னேறியுள்ளது.

உலகளாவிய நிதி மையக் குறியீட்டில் அது தெரிய வந்தது. இதற்கு முன்னர் சிங்கப்பூர் குறியீட்டில் ஆறாவது இடத்தில் இருந்தது.

இவ்வாண்டு குறியீட்டில் முதல் இடத்தை நியூயார்க்கும் இரண்டாவது இடத்தை லண்டனும் பிடித்தன.

கடும் கொவிட்-19 கட்டுப்பாடுகள், திறனாளர்களின் வெளியேற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஹாங்காங் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

உலகின் ஐந்தாவது சிறந்த நிதி மையமாக சான் ஃபிரான்சிஸ்கோ குறியீட்டில் இடம்பெற்றது.