கேலாங்கில் உள்ள கடைவீட்டின்மீது ஏறி மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடமிருந்து தப்ப முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
36 வயது சிங்கப்பூர் ஆடவரும் 38 வயது பெண் நிரந்தரவாசியும் கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் திடீர்சோதனை நடத்த வந்தபோது, அந்த இரண்டு பேரும் தப்ப முயன்றனர்.
அவசரத்தில் போதை மருந்துகளையும் சமுராய் வாள்களையும் விட்டு விட்டு அவர்கள் ஓடினர்.
சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (செப் 20) அன்று நடந்தது.
பலமுறை எச்சரித்தபோதும் அவர்கள் கதவைத் திறக்கவில்லை என்று மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
ஆடவர் இரண்டு மாடி கடைவீட்டின் சன்னல் வழியாக வெளியேறி, பக்கத்து கடைவீட்டுக்குள் நுழைந்தார். அவருடன் இருந்த மாது, மேற்கூரை வரை தப்பிச் சென்றார்.
இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இருவரும் போதைப் புழங்கிகள் என்று நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தீவு முழுவதும் நடத்திய ஐந்து நாள் திடீர் சோதனைகளின்போது இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவர் உட்பட, போதைப் பொருள் குற்றம் புரிந்த சந்தேகத்தின் பேரில் மொத்தம் 71 பேரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.


