தங்களது பாதுகாப்புக்கும் நீடித்த நிலைத்தன்மைக்கும் சிறிய நாடுகள் பலதரப்பு பன்னாட்டு முறையைச் சார்ந்துள்ளன என்றும் அந்த முறையை வலுப்படுத்த அந்த நாடுகள் துடிப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
"ஆக, பலதரப்பு முறையைப் பலப்படுத்த நாம் துடிப்புடன் பங்களிக்க வேண்டும். சிறிய நாடுகளின் நலன்களைப் பாதுகாக்க ஒரு சமமான, நியாயமான தளம் இருப்பதையும் கட்டிக்காக்க வேண்டும்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெறும் சிறிய நாடுகள் கருத்தரங்கின் விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் லீ, காணொளி வழியாகப் பேசினார்.
ஐக்கிய நாடுகள் சபையில், சிறிய நாடுகளும் குரல் எழுப்ப வகை செய்யும் பொருட்டு, இந்த முறைசாரா குழுவை சிங்கப்பூர் 1992ல் அமைத்தது.
16 நாடுகளுடன் தொடங்கிய இக்குழுவில் இப்போது 108 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இது ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் எண்ணிக்கையில் பாதிக்கு மேல்.


