செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a38d85ab-0618-4b48-aeff-d858b4eeae0a
-

இவ்வாரத்தில் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டன

இரண்டாவது முறையாக இவ்வாரத்தில் எஸ்ஸோ, கால்டெக்ஸ், ஷெல் ஆகிய மூன்று நிறுவனங்கள் தங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை நேற்று குறைத்துள்ளன.

சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் ஃபியூல் காக்கி எனும் பெட்ரோல், டீசல் விலை கண்காணிப்புத் தளம், ஷெல், எஸ்ஸோ நிறுவனங்கள் பெட்ரோல் விலையை மூன்று காசு குறைத்துள்ளது என்று தெரிவித்தது. ஆகக் கடைசி நிலவரப்படி எஸ்ஸோவின் 92-ஆக்டேன் ரக பெட்ரோல் மிகக் குறைவாக லிட்டருக்கு $2.71க்கு விற்கப் படுகிறது. அதன் 95-ஆக்டேன் ரக பெட்ரோல் லிட்டருக்கு $2.76க்கும் 98-ஆக்டேன் ரக பெட்ரோல் லிட்டருக்கு $3.23க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு $2.74 என்று கால்டெக்ஸ், ஷெல் ஆகியவற்றின் விலையுடன் ஒத்திருக்கிறது.

ஷெல் நிறுவனத்தின் 92-ஆக்டேன் ரக பெட்ரோல் லிட்டருக்கு $2.74க்கும் 95-ஆக்டேன் ரக பெட்ரோல் லிட்டருக்கு $$2.79க்கும் பிரிமியம் 98-ஆக்டேன் ரக பெட்ரோல் லிட்டருக்கு $$3.45க்கும் விற்கப்படுகிறது. கால்டெக்ஸ் 98-ஆக்டேன் ரக பெட்ரோலை விற்பதில்லை.

சீனாவின் இரு நிறுவனங்களான சைனோபெக், எஸ்பிசி ஆகியவை இவ்வார இறுதிக்குள் அல்லது அல்லது முன்னதாக பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'புளுஎஸ்ஜி' நிறுவனத்தில் 500 'ஓப்பெல் கோர்சா-யி' கார்கள் இணைப்பு

மின்சார கார் பகிர்வு நிறுவனமான 'புளுஎஸ்ஜி', 500 ஓப்பெல் 'கோர்சா-யி' வகை கார்களைத் தனது கார் எண்ணிக்கை யில் சேர்த்துக் கொண்டு உள்ளது. இன்றைய நிலவரப்படி, அவற்றின் மதிப்பு சுமார் $80 மில்லியன் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விரிவாக்கம் பல மாதங்கள் நீடிக்கும். பிரஞ்சு புளு கார்களை தனது கார்கள் எண்ணிக்கை 'புளுஎஸ்ஜி' நிறுவனம் முதல் முறையாகச் சேர்த்துக்கொண்டுள்ளது. 'புளுஎஸ்ஜி' நிறுவனத்தில் தற்போது 650 வயதான கார்கள் உள்ள நிலையில் கோல்டுபெல் நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் 250 புதிய கார்களை சாலைகளில் ஓடவிட உறுதியளித்தது. நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிங்கப்பூரின் ஒரே மின்சார கார் பகிர்வு நிறுவனமான 'புளுஎஸ்ஜி'யின் வர்த்தகத்துக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் வரும் 2026ஆம் ஆண்டு வரை $70 மில்லியன் முதலீடு செய்யப்போவதாக கோல்டுபெல் நிறுவனம் அறிவித்தது.