தப்பிக்க கடைவீட்டின் உச்சியில் ஏறி ஓடிய ஆண், பெண் கைது; போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் மொத்தம் 71 பேர் சிக்கினர்

தப்பிக்க கடைவீட்டின் உச்சியில் ஏறி ஓடிய ஆண், பெண் கைது; போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் மொத்தம் 71 பேர் சிக்கினர்

2 mins read
566b0397-32e3-46dc-848f-31fc5a6978ea
அதிகாரிகள் தீவு முழுவதும் இம்மாதம் 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடத்திய சோதனைகளில் மொத்தம் 71 பேர் கைதாயினர். அவர்கள் போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகிறது. படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு -

மத்­திய போதைப்பொருள் ஒழிப்­புப் பிரி­வின் அதி­கா­ரி­க­ளி­டம் இருந்து தப்­பு­வ­தற்­காக இரண்டு பேர் கடை­வீடு ஒன்­றின் உச்­சி­யில் ஏறி ஓடி­னார்­கள். கடை­சி­யில் அந்த இரு­வரும் பிடிபட்டனர். இந்­தச் சம்­ப­வம் கேலாங்­கில் நிகழ்ந்­தது.

அதிகா­ரி­க­ளி­டம் பிடி­பட்­டு­வி­டக் கூடாது என்ற அவ­ச­ரத்­தில் தங்­கள் கைப்பைக­ளை­யும் சாமு­ராய் கத்­தி­களை­யும் விட்­டு­விட்டு அந்த இரு வரும் தப்பி ஓட முயன்­ற­னர்.

அந்த இரு­வ­ரில் ஒரு­வர் 36 வயது சிங்­கப்­பூ­ரர். மற்­றொ­ரு­வர் 38 வயது நிரந்­தரவாசப் பெண்­மணி. இந்த விவ­ரங்­களை மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

அதி­கா­ரி­கள் தீவு முழு­வ­தி­லும் ஐந்து நாள் சோத­னை­களை நடத்­தி­னர். அவற்­றில் மொத்­தம் 71 பேர் பிடி­பட்­ட­னர். கைதா­ன­வர்­கள் போதைப்பொருள் குற்­ற­வா­ளி­கள் என்று அதி­கா­ரி­கள் சந்­தே­கப்­ப­டு­கி­றார்­கள்.

கேலாங்­கில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நண்­ப­கல் நேரத்­தில் ஒரு கடை­வீட்­டின் உள்ளே சென்று சோதனை நடத்த அதிகாரிகள் முயன்­ற­னர். அதி­கா­ரி­கள் திரும்­பத்­தி­ரும்ப எச்­ச­ரித்­தும் வீட்­டின் உள்ளே இருந்­த­வர்­கள் கத­வைத் திறக்­கவே இல்லை.

வீட்டை கண்­கா­ணித்த அதி­கா­ரி­கள், இரண்டு பேர் வீட்­டின் சன்­னல் வழி­யாக வெளி­யேறி கூரை­யில் ஏறி ஓடி­யதைப் பார்த்­த­னர்.

ஆட­வர் வேறொரு வீட்­டில் தாவி ஏறி ஓடி­ய­போது கைதா­னார். அந்தப் பெண்­மணி கூரை­யி­லேயே பிடி­பட்­டார். அந்த இரு­வ­ரும் போதைப் புழங்­கி­கள் என்று நம்பப்­ப­டு­கிறது.

அதி­கா­ரி­கள், 12 கிராம் ஐஸ் உள்­ளிட்ட பல போதைப்­பொ­ருள்­களை, அந்த இரு­வ­ரும் இருந்த கடை வீட்­டில் கைப்­பற்­றி­னர். சாமு­ராய் கத்தி உட்­பட ஆபத்­தான ஆயு­தங்­க­ளை­யும் அங்கு அதி­கா­ரி­கள் கண்­ட­னர்.

போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடத்­திய சோத­னை­களில் 158 கிராம் ஹெரா­யின், 77 கிராம் ஐஸ், 90 கிராம் கஞ்சா, 1 கிராம் ரசா­ய­னப்பொருள், 28 எரி­மின்-5 மாத்­தி­ரை­கள், ஜிஹெச்பி என்ற ரசா­யன திர­வப்பொருள் இருந்த 15 போத்­தல்­கள் ஆகி­யவை பிடி­பட்­டன.

பிடி­பட்ட போதைப்­பொ­ருள்­களின் மதிப்பு கிட்­டத்­தட்ட $26,000 என்று கணக்­கி­டப்­ப­டு­கிறது.

பிடோக், காலாங், தெம்­ப­னிஸ் உள்­ளிட்ட சிங்­கப்­பூ­ரின் பல பகுதி­களி­லும் அதி­கா­ரி­கள் சோத­னை­களை நடத்­தி­னார்­கள்.

இத­னி­டையே, அந்­தச் சோதனை­ க­ளுக்­குத் தலைமை தாங்­கிய தள­பத்­திய அதி­கா­ரி­யான சூப்­பி­ர­டெண்­டன்ட் லீ பின் ஹாவ், சிங்­கப்­பூர் சமூ­கத்­தில் போதைப்­பொ­ரு­ளுக்கு இடமே கிடை­யாது என்று திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­னார்.

போதைப்­பொ­ருள் தனிப்­பட்­ட­வர்­க­ளை­யும் குடும்­பங்­க­ளை­யும் சமூ­கங்­க­ளை­யும் நாசப்­ப­டுத்­தி­விடும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

போதைப்­பொ­ரு­ளைப் பயன்­படுத்து­வோர் தங்­க­ளுக்­கும் தங்­களைச் சுற்றி இருப்­போ­ருக்­கும் ஆபத்­தை ஏற்­ப­டுத்­து­கி­றார்­கள் என்று அவர் விளக்கினார்.