பதினைந்து ஆண்டு காலம் பிடிபடாமல் இருந்து வந்த முன்னாள் வழக்கறிஞர் ஒருவர் கைதானார். அவர் மீது நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
டேவிட் கோங் சியாக் மெங் என்ற அந்த முன்னாள் வழக்கறிஞர், சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் திரும்பினார்.
அவரை வர்த்தக விவகாரப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அந்த 55 வயது சிங்கப்பூரர், டேவிட் கோங்& அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார். வழக்கறிஞராக தொழில் நடத்தினார்.
அவர் 2007ஆம் ஆண்டில் சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிட்டார். அந்த முன்னாள் வழக்கறிஞர் தன் வாடிக்கையாளரின் $88,000 பணத்தைக் கையாடி விட்டதாக முன்பு புகார் தெரிவிக்கப்பட்டது. அவரைக் கைது செய்ய உத்தரவும் உலக காவல்துறை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் நேற்று தெரிவித்தது.

