ஆஸ்திரேலிய பயிற்சியில் 4,040க்கும் மேற்பட்ட வீரர்கள்

ஆஸ்திரேலிய பயிற்சியில் 4,040க்கும் மேற்பட்ட வீரர்கள்

1 mins read
521eb9fd-ed83-4ec9-b2f0-8f07e5dfce9b
-
multi-img1 of 3
Google News Preferred Icon

சிங்கப்பூர் ஆயுதப் படைகள் அதன் ஆகப் பெரிய வெளிநாட்டுப் பயிற்சியை மீண்டும் தொடங்குகிறது. அதனையொட்டி 4,040க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் படைவீரர்கள் ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 'எக்சர்சைஸ் வல்லாபே' என்ற அந்தப் பயிற்சி ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடக்கிறது.

ராணுவம், கடற்படை, ஆகாயப்படை ஆகிய முப்படைகளையும் சேர்ந்த படைவீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள். அந்தப் பயிற்சி நடக்கும் வட்டாரம் சிங்கப்பூரை போல நான்கு மடங்குப் பெரியது. ஆஸ்திரேலியாவில் குவீன்ஸ்லாந்தில் ஷோல்வாட்டர் பே என்ற இடத்தில் பயிற்சி நடக்கும் என்று தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.