எஸ். வெங்கடேஷ்வரன் தொடர் மீட்சிக்குத் தோதாக ஊழியர் சேர்ப்பு முயற்சி முன்னதாகவே வேகம் எடுக்கட்டும்

எஸ். வெங்கடேஷ்வரன் தொடர் மீட்சிக்குத் தோதாக ஊழியர் சேர்ப்பு முயற்சி முன்னதாகவே வேகம் எடுக்கட்டும்

4 mins read
697d3c9a-879b-416d-8a4e-00c1928eef82
-

லிட்­டில் இந்­தி­யா­வில் ஓர் உண­வ­கத்­தில் இந்த மாதத் தொடக்­கத்­தில் சாப்­பிட்டுக் கொண்டிருந்தேன். ஒரே ஓர் ஊழி­யர்­தான் 10 மேசை­க­ளுக்குச் சேவையாற்­றி­னார். ஒரு காசா­ளர்­தான் கடை­யில் இருந்­தார்.

வாடிக்கையாளர்களுக்கும் உணவு எடுத்­துச் செல்­ல­வ­ரும் மோட்­டார்­சைக்கிளோட்­டி­க­ளுக்­கும் அவர்­தான் சேவை­யாற்­றி­னார். சமை­யல் அறை­யில் நான்கு சமை­யல்­கா­ரர்­கள் பர­ப­ரப்­பாக, சுறுசுறுப்­பாக வேலை பார்த்­த­னர்.

காசா­ள­ரி­டம் பேச்சுக் கொடுத்­த­போது, வாடிக்கையாளர்­க­ளுக்­கு சேவை யாற்­றும் ஊழியர்­களை, சமை­யல்­கா­ரர்­கள் பற்றாக்குறை கார­ண­மாக சமையல் அறைக்கு அனுப்ப வேண்­டிய தேவை ஏற்­பட்­டு­விட்­ட­தாகத் தெரி­ய­வந்­தது.

சில சமையல்­கா­ரர்­கள் சிங்­கப்­பூரை விட்­டுப் போய்­விட்­ட­னர். சமை­யல் வேலைக்கு வெளி­நாட்டினரை அமர்த்து வது சிர­மமா­ன­தாக உள்ளது. உள்ளூர் ஊழி­யர்­­கள் பற்றி சொல்ல வேண்டிய தில்லை. இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு ஏற்­படும் வகை­யில் வெளி­நாட்டு ஊழி­யர் கொள்­கை­யில் மாற்­றம் வரும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் அதற்கு நிறு­வ­னங்­கள் அதிக காலம் காத்­தி­ருக்க வேண்­டும் என்­ப­து­தான் இப்போதைய பிரச்­சினை.

சேவைத் துறை, உற்­பத்­தித் துறை­நிறு­வ­னங்­கள், இந்­தியா, பிலிப்­பீன்ஸ் போன்ற வழக்கமற்ற நாடுகளில் இருந்து ஒரு புதிய பட்­டி­ய­லில் இடம்­பெ­றும் குறிப்­பிட்ட வேலைகளுக்கு 2023 செப்­டம்­பர் முதல் ஒர்க் பர்­மிட்­டில் ஊழி­யரை வேலை­யில் அமர்த்தலாம் என்று நாடாளுமன்றத்­தில் இந்த ஆண்­டு வரவு­செ­ல­வுத் திட்ட விவாதத்­தின்­போது அறி­விக்­கப்­பட்­டது.

தங்­கள் துறை­களில் வேலை பார்க்க குறிப்­பிட்ட நாடு­களில் இருந்­து­தான் ஒர்க் பரி­மிட் ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்த முடி­யும் என்ற ஒரு நிபந்­தனை கார­ண­மாக எஸ் பாஸ் என்ற அனு­ம­தி­யின் பேரில் சாதா­ரண நிலை ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்தி உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு அந்த அறிவிப்பு உத­வும்.

சேவைத்­துறை, உற்­பத்­தித்­து­றை­யைப் பொறுத்தவரை, மலே­சியா, சீனா, தென்­கொ­ரியா, ஹாங்­காங், மக்­காவ், தைவான் ஆகிய வழி­வ­ழி­யான இடங்­களில் இருந்து­தான் ஒர்க் பர்­மிட்­டில் ஊழி­யர்­க­ளைச் சேர்க்க முடி­யும். புதி­தாக நடை­மு­றைக்கு வர இருக்­கின்ற ஏற்­பாடு, முக்­கி­ய­மாக உற்­பத்­தித்­துறை, உணவு பத­னீட்­டுத் துறை ஊழி­யர்­கள், இந்­திய உணவகங்­களில் சமை­யல் வல்­லு­நர்­கள் ஆகி­யோரை வேலை­யில் அமர்த்த வகை செய்­யும்.

ஆனால் இந்­தப் புதிய ஏற்­பாடு அடுத்த ஆண்­டில்­தான் தொடங்­கும் என்­பதே பிரச்­சி­னை­யாக உள்­ளது.

இவ்­வே­ளை­யில், பல்­வேறு கார­ணங்­களால் தேர்ச்சி உள்ள வெளி­நாட்­டி­னர் தங்­கள் சொந்த நாட்­டி­லேயே வேலை பார்க்க விரும்­பும் போக்கு அதி­க­மாகி வரு­கிறது என்­று சிங்­கப்­பூர் உற்­பத்­தித்­துறை கூட்­ட­மைப்­பைச் சேர்ந்த சிலர் சொல்­கி­றார்­கள்.

எஸ் பாஸ் குறைந்­த­பட்ச சம்­ப­ளம் கூடி இருப்பதால், அது தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் அத்­த­கைய அனு­ம­தி­யில் வெளி­நாட்­டினரை வேலையில் அமர்த்­து­வது இப்­போது இருப்­ப­தை­விட இன்­னும் சவா­லா­ன­தாக இருக்­கும் என்­கி­றார் இந்­தக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் லெனன் டான்.

வழி­வ­ழி­யான நாடு­களில் இருந்து சில தொழில்­து­றை­க­ளுக்கு ஊழி­யர்­கள் கிடைக்­க­வில்லை என்று ஃபிளக்ஸ்­மெக் இன்­ஜி­னி­ய­ரிங் என்ற நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் டான் ரு-டிங் கூறு­கி­றார்.

சிங்­கப்­பூர், தொற்­றி­லி­ருந்து மீட்­சி அடைந்து வரு­கிறது. இந்நிலை­யில், நிறு­வனங்­கள் தங்­க­ளுக்குத் தேவைப்­படும் மனி­த­வ­ளத்­துடன் இருந்­தால்­தான் அவை வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யும். தொற்றுக் காலத்­தில் எல்­லாம் முடங்­கி­விட்­ட­தால் இப்­போது தேவை­கள் கிடு­கி­டு­வென கூடி வரு­கின்­றன. தொழில் நடத்­து­வ­தில் அதிக நம்­பிக்கை ஏற்­பட்­டிருப்­ப­தைக் காண முடி­கிறது.

எல்லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டதை அடுத்து சிங்­கப்­பூ­ருக்கு வரும் வெளி­நாட்டு ஊழி­யர்­ எண்­ணிக்கை அதி­கரித்துள்ளது. காலி­யாக இருந்த இடங்­களை முத­லா­ளி­கள் நிரப்­பு­கி­றார்­கள்.

ஊழி­யர் சேர்ப்பு முயற்­சி­களை நிறு­வனங்­கள் வேகப்­ப­டுத்தி வரு­கின்­றன. என்­றா­லும்­கூட சில வேலை­களில் தேர்ச்சி உள்ள ஊழி­யர்­க­ளைச் சேர்ப்­பது கடி­ன­மாக இருக்­கிறது என்­ப­து­தான் உண்மை.

அத்­த­கைய ஊழி­யர்­கள் இல்­லா­மல் எவ்­வ­ள­வு­தான் முயன்­றா­லும் நிறு­வ­னங்­கள் தேவை­களை நிறை­வேற்ற முடி­யாது. புதிய ஏற்­பாட்­டிற்கு 2023 செப்­டம்­பர் வரை காத்­தி­ருக்க வேண்­டும் என்­பது பல நிறு வனங்­க­ளைப் பொறுத்தவரை தாக்குப் பிடிக்க இயலாத ஒன்­றா­கவே இருக்­கும்.

ஆகை­யால், வழக்­க­மற்ற நாடு­களில் இருந்து ஒர்க்­ பர்­மிட்­டில் ஊழி­யர்­க­ளைச் சேர்க்க அனு­ம­திக்­கும் அந்­தப் புதிய திட்­டத்தை முன்­ன­தா­கவே செயல்­ப­டுத்­தும்­படி ஏற்­கெ­னவே பல­ரும் குரல் கொடுத்து இருக்­கி­றார்­கள்.

கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு இருப்­ப­தால் பொரு­ளி­யல் சூடு­பி­டிக்­கிறது. அதற்­கேற்ப பொருள், சேவை­க­ளுக்­கான தேவை கூடு­கிறது. ஆகை­யால், அந்­தத் திட்­டத்தை முன்­ன­தா­கவே நிறை­வேற்­றி­னால் அது பெரி­தும் பாராட்­டக்­கூ­டி­ய­தாக இருக்­கும் என்று சிங்­கப்­பூர் உற்­பத்­தித் துறை கூட்­ட­மைப்­பின் தலை­வர் திரு டான் கூறி­னார்.

உற்­பத்­தித் துறை­யில் இயந்­திர வல்லு­நர்­கள், சாதனப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் போன்ற முக்­கி­ய­மான வேலை­க­ளுக்­கும் அந்­தப் பட்­டி­யலை நீட்­டிக்­க­லாம் என்­று ஃபிளக்ஸ்­மெக் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் குறிப்பிட்டார். ­

பட்­டி­ய­லில் இடம்­பெற பொருத்­த­மான வேலை­க­ளைப் பற்றி பல்­வேறு துறைகளைச் சேர்ந்த அமைப்­பு­க­ளு­டன் தொடர்ந்து தான் செயல்­ப­டப் போவ­தாக மனி­த­வள அமைச்சு அறி­வித்துள்ளது. அடுத்த ஆண்டு செப்­டம்­ப­ருக்கு முன்­பே மேலும் பல வேலை­கள் பரி­சீலனை­யில் எடுத்­துக்­கொள்­ளப்­படும் என்று நம்­பப்­படு­கிறது.

மனி­த­வளப் பிரச்­சினை தொடர் பிரச் சினை­யாகவே இருந்து வரு­கிறது. வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைச் சார்ந்து இருப்­பதை சிங்­கப்­பூர் குறைத்­துக்­கொள்ள வேண்­டும்; இதற்­காக அது உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளித்து அவர்­களை மேம்­படுத்த வேண்­டும் என்ற கருத்து இப்­போது பர­வ­லாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­கிறது.

வலு­வான உள்­ளூர் ஊழி­யர் அணி உரு­வாக அர­சாங்­கம் பல்­வேறு செயல்­திட்­டங்­கள் மூலம் ஆத­ரவு அளித்து வரு­கிறது. இருந்­தா­லும் தொற்று கார­ண­மாக கைந­ழு­விப் போய்­விட்ட இழப்­பு­க­ளைச் சரி­கட்ட முயன்று வரும் நிறு­வ­னங்­க­ளைப் பொறுத்­த­வரை உட­ன­டி­யாக தீர்வு காண­வேண்­டிய ஒரு பிரச்­சி­னையை அவை எதிர்­நோக்­கு­கின்­றன.

வழக்­க­மற்ற நாடு­களில் இருந்து ஊழி­யர்­களை வேலை­யில் சேர்ப்­ப­தற்­கான அனு­ம­தி­யும் அத்­த­கைய ஊழி­யர்­களை மேலும் பல வேலை­களில் சேர்ப்­ப­தற்­கான விரி­வான பட்­டி­ய­லும் இருக்­கு­மா­னால் அது அத்­த­கைய நிறு­வ­னங்­க­ளுக்கு பெரி­தும் தேவைப்­படும் நிவா­ர­ண­மாகும்.