சமூக மன்றத்தில் ஈரச் சந்தை, உணவு அங்காடி நிலைய வசதிகள்

சமூக மன்றத்தில் ஈரச் சந்தை, உணவு அங்காடி நிலைய வசதிகள்

1 mins read
b3266587-a681-4129-b686-9bec1ef936e0
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

புதிதாக திறக்கப்பட்ட ஃபேர்ன்வெல் சமூக மன்றத்தில் ஈரச் சந்தை வசதியோடு, உணவு அங்காடி நிலையமும் அமைந்துள்ளது. ஈரச் சந்தையில் வாங்கும் சமையல் பொருள்களை குறிப்பிட்ட சில உணவு கடைக்காரர்களிடம் கொடுத்தால், அதை அவர்கள் உணவாக சமைத்து தந்து நாம் ருசித்து சாப்பிட்டுச் செல்லும் வசதியையும் மன்றம் அளிக்கிறது.

இன்று மன்றத்தை அதிகாரபூர்வமாக பிரதமர் லீ சியன் லூங் திறந்துவைத்தார். குடும்பங்களுக்கு உகந்த ஓர் இடமாக மன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பொது இடங்களில் குடியிருப்பாளர்கள் ஒன்றுகூட சமூக மன்றங்கள் போன்ற பொது கட்டமைப்புகள் முக்கியம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இதை கருத்தில் கொண்டு ஃபேர்ன்வெல் சமூக மன்றம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அங் மோ கியோ குழுத்தொகுதியில் அமைந்துள்ள இந்த சமூக மன்றத்தில் 27 உணவு அங்காடி கடைளுகம், 20 ஈரச் சந்தைக் கடைகளும் உள்ளன. 24 மணிநேரம் திறந்திருக்கும் உடற்பயிற்சி நிலையம், ஓடுவதற்கு தடம், குழந்தை பராமரிப்பு நிலையம், விளையாட்டுக் கூடம் போன்ற பல வசதிகள் புதிய சமூக மன்றத்தில் உள்ளன.