தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முறைத்துப் பார்த்ததால் கலவரம்: ஆறு பேர் கைது

1 mins read
72195270-58f0-4ca8-bb57-54b6ccbf7f2e
படம்: கூகிள் வரைப்படம் -

கலவரத்தில் ஈடுபட்ட ஆறு பேரை காவல் துறை கைது செய்துள்ளது. சந்தேக நபர்கள் 16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். பேஃபிரான்ட் அவென்யு வட்டாரத்தில் நேற்று காலை ஆறு மணியளவில் ஆடவர் ஒருவருக்கும் ஆறு பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதன் தொடர்பில் காவல் துறையினருக்கு அழைப்பு வந்ததது.

20 வயதான ஆடவருக்கு முகத்திலும் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன. அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆறு பேர் அடங்கிய கும்பலை காவல் துறை இரண்டு மணி நேரத்தில் வளைத்துப் பிடித்தது.

ஒருவரையொருவர் உற்றுப் பார்த்து முறைத்துக் கொண்டதால், கைகலப்பு ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களின் மீது கலவரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படும்.