மழையைக்கூட பொருட்படுத்தாமல், சுமார் 3,000 பேர் இன்று நடைபெற்ற மஞ்சள் நாடா ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டனர். இதன் மூலம் $150,000 நிதி திரட்டப்பட்டுள்ளது. முன்னாள் குற்றவாளிகளுக்கு உதவ இந்த நிதி பயன்படுத்தப்படும். முன்னாள் குற்றவாளிகளை சமூகத்தில் மீண்டும் இணைத்துக்கொள்வது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
கிருமித் தொற்று காரணமாக கடந்த ஈராண்டுகளாக இந்த ஓட்டப்பந்தயம் நடைபெறவில்லை.
ஓட்டப்பந்தயத்தில் இரு பிரிவுகள் இருந்தன. ஆறு அல்லது பத்து கிலோமீட்டர் தூரத்தை ஓடவும் நடக்கவும் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கலாம். கொவிட்-19 காரணமாக இவ்வாண்டு நிகழ்ச்சியில் 3,000 பேர் வரை கலந்துகொள்ள வரம்பு விதிக்கப்பட்டது. உள்துறைக் குழு, தொண்டூழியர்கள், பங்காளிகள், பொதுமக்கள் என பலதரப்பினர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டனர். பந்தயத்தை துணைப்
பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் தொடங்கிவைத்தார்.
இந்து அறக்கட்டளை நிறுவனம்-ஆஷ்ரம் போதையர் மறுவாழ்வு இல்லத்தில் வசிப்பவர்கள் தங்கள் பங்கிற்கு புக்கிட் தீமா இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள களைச்செடிகளை அகற்றினர்.