வெளிநாட்டு ஊழியர்களுக்கு கலப்பு தற்காப்புக் கலை பயிலரங்கு

வெளிநாட்டு ஊழியர்களுக்கு கலப்பு தற்காப்புக் கலை பயிலரங்கு

2 mins read
fda5ae7f-a040-47ab-9c33-22ff44e9cfa4
லியோ தங்குவிடுதியில் கலப்பு தற்காப்புக் கலை பயிற்சியில் ஈடுபட்ட வெளிநாட்டு ஊழியர்கள். இடப்பக்கம் இருப்பவர் பயிற்சியில் பங்கேற்ற பத்மநாபன். படம்: லியோ தங்குவிடுதி -

மாதங்கி இளங்­கோ­வன்

கலப்பு தற்­காப்­புக் கலை­யில் ஈடு­படும் அமீர் கானும் பன்­ப­யாக் ஜித்­மு­வாக்­னொ­னும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உடற்­ப­யிற்சி கலந்த தற்­காப்­புக் கலை பயிலரங்கை நேற்று நடத்­தி­னர்.

'ஒன் சாம்­பி­யன்­ஷிப்' ஏற்­பாட்­டில் நடந்­தே­றிய அப்­ப­யி­ல­ரங்­கில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் ஒரு மணி நேரத்­திற்கு கலப்பு தற்­காப்புக் கலை­யின் அடிப்­படை அம்­சங்­கள் கொண்ட உடற்­ப­யிற்­சி­யைச் செய்­த­னர். உட­லுக்கு வலிமை சேர்த்­த­தோடு திற­மை­வாய்ந்த பிர­ப­லங்­க­ளு­டன் பழ­கும் வாய்ப்­பை­யும் அதன் மூலம் அவர்­கள் பெற்­ற­னர்.

லியோ தங்­கு­வி­டு­தி­யி­லுள்ள ஏறத்­தாழ 40 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் ஒன்­று­கூடி அந்த விடு­தி­யில் இருக்­கும் ஓர் அறை­யில் உடற்பயிற்சி ­களில் சுறு­சு­றுப்­பா­க­வும் மகிழ்ச்­சி­யா­க­வும் ஊக்­கத்­தோ­டும் ஈடு­பட்­டனர்.

சிங்­கப்­பூ­ரில் கடந்த 22 ஆண்டு ­க­ளாக பணி­பு­ரி­யும் பத்­ம­நா­பன், நேற்­றைய பயி­ல­ரங்கு ஒரு புது­மை­யான அனு­ப­வ­மாக இருந்­த­தா­க­வும் மற்ற ஊழி­யர்­க­ளோடு சேர்ந்து உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­பட்­டது புத்­து­ணர்ச்­சி­யைத் தந்­த­தா­க­வும் கூறி­னார்.

"நேரம் கிடைக்­கும்­போ­தெல்­லாம் உடற்­ப­யிற்­சிக் கூடத்­திற்­குச் செல்­வதை நானும் மற்ற ஊழி­யர்­களும் வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளோம்.

"கலப்பு தற்­காப்­புக் கலை­களில் வல்­லு­நர்­க­ளாக இருப்­ப­வர்­கள் எங்­களுக்குக் கற்­றுத் தந்­தது உடற்­பயிற்சியில் ஈடுபட அதிக ஊக்­கம் தந்­துள்­ளது," என்­றார் பத்­ம­நா­பன்.

'கிக் பாக்­சிங்', 'முவாய் தாய்' போன்ற தற்­காப்­புக் கலை­களில் அனு­ப­வம் கொண்ட அமீர் கான், தற்­காப்­புக் கலை­களை வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்குக் கற்­றுக்­கொ­டுக்­கும்­போது மன­நி­றைவை பெறுவதாகக் கூறி­னார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கற்­றுக்­கொள்ள தோதாக ஏற்ற வேகத்­தில் உடற்­ப­யிற்­சி­யை­யும் கலப்பு தற்­காப்­புக் கலை­ நுணுக்­கங்­க­ளை­யும் கற்­றுக்­கொடுக்க முயன்­றேன்," என்­றா­ர­வர்.

லியோ தங்­கு­வி­டு­தி­யின் மேலா ­ள­ரான பாவா சாஹிபு, ஊழி­யர்­களின் உடல் ஆரோக்­கி­யத்­தை­யும் மன ஆரோக்­கி­யத்­தை­யும் மன­திற்­கொண்­டு­தான் கலப்பு தற்­காப்­புக் கலை­கள் பயி­ல­ரங்­கிற்கு ஏற்­பாடு செய்­த­தாகத் தெரிவித்தார்.

"இந்­தப் பயி­ல­ரங்கு மட்­டு­மல்­லா­மல் ஊழி­யர்­களை மகிழ்­விக்­கும் பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஏற்­பாடு செய்ய திட்­ட­மி­டு­கி­றோம். உட­லுக்­கும் உள்­ளத்­திற்­கும் புத்­துணர்ச்சி தரும் இந்­ந­ட­வ­டிக்­கை­களில் ஈடு­பட நமது ஊழி­யர்­கள் நிச்­ச­யம் ஆவ­லு­டன் உள்­ள­னர்," என்று அவர் மேலும் கூறி­னார்.