அமைச்சர் விவியன்: அமெரிக்க-சீன உறவில் கொஞ்சம் நம்பிக்கை

நியூ­யார்க்­கில் அமெ­ரிக்க, சீன வெளி­யுறவு அமைச்­சர்­கள் சந்­தித்­த­னர். அத­னை­அடுத்து அந்த இரு நாட்டு உற­வில் தமக்கு கொஞ்­சம் நம்­பிக்கை பிறந்து இருப்­ப­தாக சிங்­கப்­பூ­ரின் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்துள்ளார்.

ஐநா பொதுச் சபைக் கூட்­டத்­தில் சனிக்­கி­ழமை டாக்­டர் விவி­யன் உரை­யாற்­றி­னார். அதற்­குப் பிறகு அவர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் பேசி­னார்.

“தைவான் நீரி­ணை­யில் அண்­மைய வாரங்­களில் இடம்­பெற்ற செயல்­கள் கவலை தரு­ப­வை­யாக இருந்­தன.

“அதீத கவலை என்­று­கூட நான் சொல்­வேன்,” என்­றார் அவர். ஆனால், அந்த இரு நாடு­க­ளின் அமைச்­சர்­கள் நேருக்கு நேர் சந்­தித்து பேசி இருக்­கி­றார்­கள்.

“சூழ்­நி­லை­யின் ஆழத்தை இரண்டு தரப்­பு­களும் புரிந்­து­கொண்டு இருப்­ப­தாக நான் நினைக்­கி­றேன்.

“இதன் அடிப்படையில் எனக்கு கொஞ்சம் நம்­பிக்கை ஏற்­பட்டுள்ளது,” என்று டாக்­டர் விவி­யன் தெரி­வித்தார்.

அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் தப்­புக் கணக்கு­க­ளைத் தவிர்த்­துக்கொண்டு செயல்­படும். நல்ல எண்­ணம் நில­வும் என்­பதே தமது நம்­பிக்கை என்­றா­ர­வர்.

இருந்­தா­லும் “நம்­பிக்­கை­தான் நான் தெரி­வித்து இருக்­கி­றேன். நடக்­க­போ­வதை நாம் காத்­தி­ருந்­து­தான் பார்க்க வேண்டும்,” என்­றார் டாக்­டர் விவி­யன்.

அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்­கள் மிக முக்­கிய கால­கட்­ட­மாக இருக்­கும் என்று அவர் தெரி­வித்­தார்.

“வரும் மாதங்­களில் சூழ்­நிலை மேம்­பட வேண்­டும். இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான பதற்­றம் குறை­ய­வேண்­டும். உச்ச மாநா­டு­கள் நடக்­க­வி­ருக்­கின்­றன. அவை இரண்டு தரப்­பு­களும் சந்­தித்து பேச வாய்ப்­பு­களை வழங்­கும்,” என்­றும் டாக்டர் விவியன் கூறி­னார்.

“சீன அதி­ப­ரும் அமெ­ரிக்க அதி­ப­ரும் நேருக்கு நேர் சந்­திப்­பார்­கள். ஏதோ ஒரு வகை ஏற்­பாட்­டுக்கு வரு­வார்­கள்.

“அந்த ஏற்­பாட்­டைப் பின்­பற்றி அதி­காரி­களும் அமைச்­சர்­களும் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ரும் ஆக்­க­க­ர­மான பேச்­சு­வார்த்­தை­களை நடத்த முடி­யும் என்­பது எனது நம்­பிக்­கை­யாக இருக்­கிறது,” என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

உக்­ரேன் போர், உணவு, எரி­சக்தி விலை உயர்வு, அமெ­ரிக்க-சீன உறவு, பரு­வ­நிலை மாற்­றம் போன்ற உல­க­ளா­விய பல பிரச்­சி­னை­கள் கார­ண­மாக 77வது ஐநா பொதுச் சபை கூட்­ட­மும் அது தொடர்­பான இதர கூட்­டங்­களும் மந்­த­மா­கவே இருந்­தன என்று அமைச்­சர் சிங்­கப்­பூர் ஊட­கத்­தி­டம் தெரி­வித்­தார்.

உக்­ரேன் பிரச்­சினை தொடர்­பில் ரஷ்­யா­வும் ஐரோப்­பா­வும் பிளவுபட்டு மிக­வும் விலகி இருக்­கின்­றன என்­பதை அவர் சுட்­டி­னார்.

உக்­ரே­னில் தனது ராணு­வத்­தைப் பலப்­படுத்த சேமப் படை­யி­னரை ரஷ்யா திரட்டு­வது ஒரு கெட்ட அறி­குறி என்­றும் டாக்­டர் விவி­யன் கூறி­னார்.

ஐநா­வில் ஐந்து நாள்­களில் 60க்கும் மேற்­பட்ட நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சர்­கள், தலை­வர்­களை தான் சந்­தித்­த­தாக வும் டாக்டர் விவியன் தெரி­வித்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!