ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்ஷோ அபேவின் இறுதிச் சடங்கு, நாளை செவ்வாய்க்கிழமை தோக்கியோவில் நடக்கிறது.
பிரதமர் லீ சியன் லூங் அந்த இறுதிச்சடங்கில் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
பிரதமருடன் அவரின் துணைவியாரும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் செல்வார்கள் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்தது.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் இன்றும் நாளையும் தற்காலிக பிரதமராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் ஆக அதிக காலம் பிரதமராக பதவி வகித்தவரான அபே, கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

