இளையர்களின் உழைப்பையும் மேம்பாட்டையும் சிறப்பிக்கும் நோக்கில் உன்னதத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் 1992ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் விருதுகள் வழங்கி வருகிறது.
கடந்த சனிக்கிழமையன்று நடை பெற்ற விழாவில் சிண்டாவின் வரலாற்றிலேயே ஆக அதிகமான எண்ணிக்கையில் 782 பேர் விருது பெற்றனர். அவ்வாறு விருது பெற்ற சிலர், தங்கள் கல்விப் பயணத்தைப் பற்றியும் சந்தித்த சவால்கள் பற்றியும் இங்கு பகிர்ந்துகொள்கின்றனர்.

