சோத­னை­யை எதிர்­கொள்வதே சாதனை

சோத­னை­யை எதிர்­கொள்வதே சாதனை

2 mins read
e7dc020a-9891-485f-a531-8f852e44ea92
-

தந்­தை­யின் தொழி­லில் தோல்வி ஏற்­பட்­டது, அதே ஆண்­டில் அவர் விபத்­துக்­குள்­ளாகி வேலைக்­குச் செல்­லா­தது என பார்த்­தி­பன் சர்ச்­சில் குடும்­பத்­தின் நிதி­நி­லைமை மோச­ம­டைந்­தது. அந்த ஆண்டு தேசிய கல்­விக் கழ­கத்­தில் இருந்த அவ­ரால் தொடர்ந்து பள்­ளிக் கட்­ட­ணத்­தைச் செலுத்த முடி­ய­வில்லை.

அப்­போது அவர் நிரந்­த­ர­வாசி என்­ப­தால் கல்வி அமைச்­சின் நிதி­யு­த­வித் திட்­டங்­க­ளுக்­கும் அவர் தகு­தி­பெ­ற­வில்லை.

இச்­சூ­ழ­லில் வேறு வழி­யின்றி படிப்பை நிறுத்­தி­னார். பிறகு சிங்­கப்­பூர்க் குடி­மைத் தற்­காப்­புப் படை­யில் தன் தேசிய சேவையை முடித்­தார். தற்­காப்பு அமைச்­சின் ஒரு பிரி­வின் தள­ப­தி­யா­கச் சேர விருப்­பப்­பட்­ட­போ­தும் குறைந்­தது ஒரு நைட்டெக் சான்­றி­தழ் தகுதி தேவைப்­பட்­டது. அந்த ஆசை­யும் ஈடே­றா­மல் போனது.

தன்­னு­டைய குடி­யு­ரி­மை­யைப் பெற்ற பிறகு 2020ஆம் ஆண்­டில் சிண்­டா­வின் உத­வி­யு­டன் விமான இயந்­தி­ர­வி­யல் தொழில்­நுட்­பத் துறை­யில் தன் நைட்டெக் கல்­வி­யைத் தொடர்ந்­தார் பார்த்­தி­பன்.

"தேசிய கல்­விக் கழ­கத்­தில் 5,000 வெள்­ளிக்­கும் அதி­க­மான எனது பள்­ளிக் கட­னைச் செலுத்த சிண்டா உத­வி­யது. என் படிப்பு முடி­யும்­வரை சிண்டா வழங்­கிய நிதி­யு­தவி எனக்­குப் பெரி­தும் கைகொ­டுத்­தது," என்றார் அவர்.

தேசிய கல்­விக் கழ­கத்­தில் உன்­ன­தத் தேர்ச்சி பெற்ற இவர், தற்­ச­ம­யம் சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் இயந்­தி­ரப் பொறி­யி­யல் துறை­யில் படித்து வரு­கி­றார். 'சிறந்த பட்­ட­தாரி விருது' உள்­ளிட்ட பல்­வேறு விருது­ க­ளை­ பெற்றுள்ள 27 வயது பார்த் திபன், வாழ்க்­கை­யில் எதிர்­பா­ராத சோத­னை­கள் வந்­தா­லும் அவற்றை எதிர்­கொண்டு கல்­வி­யைத் தொடர்­வது நம் வாழ்க்­கை­யைச் செம்­மைப்­ப­டுத்­தும் என்­ப­தற்கு ஒரு முன்­னு­தா­ர­ண­மாக விளங்­கு­கி­றார்.