குறிக்­கோள் ஈடேற துணிந்திட வேண்டும்

குறிக்­கோள் ஈடேற துணிந்திட வேண்டும்

1 mins read
ac84dec9-030b-4342-b2e2-264b30875ae9
-

இரண்டு குழந்­தை­க­ளுக்­குத் தாயான சாரா பீவி, தன் கனவை நோக்­கிய பய­ணத்­திற்கு வயது ஒரு தடை­யல்ல என்­கி­றார்.

தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம் நைட்டெக் பிரி­வில் உன்­னத விரு­தி­னைப் பெற்­றி­ருக்­கும் இவர், தனது 40வது வய­திற்­குப் பின்­னர் இடைக்­கால பணி­மாற்­றம் செய்­யத் துணிந்­தார். தனி­யார் நிறு­வ­னம் ஒன்­றில் 10 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக மூத்த சில்லறை வர்த்­தக உத­வி­யா­ள­ராகப் பணி­பு­ரிந்து, 2020ஆம் ஆண்­டில் தாதி­யா­கும் கன­வில் அத்­து­றை­யில் பயி­லத் தொடங்­கி­னார். சக மாண­வர்­கள் தன்­னை­விட 20 வயது குறைந்­த­வர்­க­ளாக இருந்­தது ஆரம்­பத்­தில் தனக்­குள் சற்று தயக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­ய தாகவும் பல ஆண்­டு­களுக்­குப் பிறகு படிப்­ப­தும் தேர்வு எழு­து­வ­தும் மிக­வும் சிர­ம­மாக இருந்­த­தா­க­வும் கூறி­னார்.

உறு­தி­யு­டன் தொடர்ந்த இவ­ருக்கு, பெற்­றோ­ரும் பிள்­ளை­களும் மிகுந்த ஆத­ரவு அளித்­த­னர். அவர்­கள் அளித்த ஊக்­கத்­தால் சிறிது காலத்­தி­லேயே படிக்­க­வும் வகுப்­

ப­றைச் சூழ­லில் இருக்­க­வும் பழ­கிக்­கொண்­டார். சக மாண­வர்­களும் ஆசி­ரி­யர்­களும் தன் கனவை அறிந்து ஒத்­து­ழைத்­த­தா­க­வும் கூறி­னார் சாரா.

தொற்று காலத்­தில் பிள்­ளை­கள் மட்­டு­மன்றி தனக்­கும் இணை­ய­ம்வழி பாடங்­கள் நடந்­தது சவால்­மிக்­க­தாக இருந்தபோதும் பிள்­ளை­க­ளு­டன் சேர்ந்து படித்த நாள்­கள், அவர்­க­ளுக்­குள் அதிக நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தாக நினை­வு­கூர்ந்­தார்.

தற்­ச­ம­யம் தேசிய பல்­க­லைக்­

க­ழக மருத்­து­வ­ம­னை­யில் முழு­நே­ர தாதி­யா­கப் பணி­பு­ரி­யும் இவர், இந்­தப் பணி தனக்கு மிகுந்த மன

­நி­றைவை அளிப்­ப­தா­கக் கூறி­னார். சூழ்­நி­லை­யைக் கார­ணம் காட்டி கன­வைக் கைவி­டா­மல் உறு­தி­யுடன் தொடர­வேண்­டும் என்று அறி­வு­றுத்த விரும்­பு­கி­றார் சாரா.