கலைத்­து­றை­யில் கால்­ப­திக்க லட்­சி­யம்

சிறு­வ­யது முதலே கலைத்­து­றை­யில் நாட்­டம் கொண்­ட­வர் நூர் ஹசினா, 26. தந்­தை­யின் குறைந்த வரு­மா­னத்­தி­னால் பல நிதி நெருக்­க­டி­க­ளைச் சந்­தித்­தார்.

படிக்­கும் காலத்­தில் சிண்­டா­வின் உத­வித்­தொ­கை­ இவ­ருக்­கும் இவ­ரு­டைய சகோ­த­ரி­க­ளுக்­கும் பெரி­தும் உத­வியது. உயர்­நி­லைப்­பள்­ளிக்­குப் ­பின் அவர் கலைத்­து­றை­யைத் தேர்ந்­தெ­டுக்க விரும்­பி­ய­போது பெற்­றோர் துணை நின்­ற­னர். சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் புத்­தாக்க எழுத்­துத் துறை­யில் மூன்­றாண்டு பட்­ட­யக்­கல்வி படித்த இவர், அப் படிப்­புக்­கான கட்­ட­ணத்­தைச் செலுத்த மிக­வும் சிர­மப்­பட்­டார்.

வங்­கி­யில் கல்­விக் கடன் பெற்­ற­து­டன் பகு­தி­நேர நிகழ்ச்சி ஒருங்­கி­ணைப்­பா­ள­ரா­கப் பணி

­பு­ரிந்­தார். இவரது தாயா­ரும் இவ­ரின் கல்­லூ­ரிக் கட்­ட­ணத்­திற்­காக பகு­தி­நேர வேலைக்­குச் சென்­றார். படிப்­பை­யும் பகு­தி­நேர வேலை­யை­யும் சமா­ளிப்­பது கடி­ன­மாக இருந்­த­தா­கக் கூறி­னார் ஹசினா. கலைத்­து­றை­யில் சாதிக்க வேண்­டும் என்ற துடிப்பு, சிர­ம­மான அந்த கால­கட்­டத்­தைக் கடந்­து­வர உத­வி­ய­தா­கக் கூறி­னார்.

பட்­ட­யக்­கல்­விக்­குப்­ பின் எந்­தத் துறை­யைத் தேர்ந்­தெ­டுப்­பது என்­ப­தில் தெளி­வில்­லா­மல் இருந்­த போது மூன்­றாண்டு இடை­வெளி விட முடி­வெ­டுத்தார். தனி­யார் நிறு­வ­னம் ஒன்­றில் விளம்­பர மேலா­ள­ராக இணைந்­தார். வாழ்க்­கைப் பய­ணத்­தில் அவ்­வப்­போது குழப்­பம் ஏற்­ப­டும்­போது அவ­

ச­ரப்­ப­டா­மல் இது­போன்ற இடை­வெளி விடு­வது சரி­யான பாதைக்­குச் இட்­டுச்­செல்­லும் என்பதை தான் உணர்ந்­த­தா­கக் கூறினார் அவர். அண்­மை­யில் லசால் கலைக் கல்­லூ­ரி­யில் கலைத்

­து­றையில் இளங்­க­லைப் பட்­டத்­து­டன் உன்­ன­தத் தேர்ச்சி பெற்­றார். இளங்­க­லைப் படிப்­பின்­

போ­தும் கல்­லூ­ரிக் கட்­ட­ணம் கட்­டு­வ­தற்­காக பகு­தி­நேர வேலை செய்­தார். கலைத்­து­றை­யில் வாழ்­நாள் முழு­வ­தும் இணைந்­தி­ருக்க எத்­தகு சவால்­க­ளை­யும் சந்­திக்கத் தயார் என்கிறார் இவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!