பழைய மோட்டார் சைக்கிள்களுக்குப் புதிய திட்டம்

சிங்­கப்­பூ­ரில் பழைய மோட்­டார் சைக்­கிள்­கள் 2028ஆம் ஆண்டு முதல் தடை செய்­யப்­படும் என்று அறி­விக்­கப்­பட்டு நான்கு ஆண்­டு­ க­ளுக்­கும் மேலா­கி­விட்­டது.

இந்­நி­லை­யில், 2003ஆம் ஆண்­டுக்கு முன்பு பதிவு செய்­யப்­பட்ட மோட்­டார் சைக்­கிள்­கள் கிளா­சிக் வாக­னத் திட்­டத்­தில் சேர்க்­கப்­படும் தகு­தியை எட்­டும் வரை சிறப்­புத் திட்­டத்­தின்­கீழ் உரி­மை­யா­ளர்­கள் வைத்­தி­ருக்­க­லாம்.

பதிவு செய்­யப்­பட்டு குறைந்­தது 35 ஆண்­டு­கள் ஆகி­யுள்ள நிலை­யில் கிளா­சிக் வாக­னத் திட்­டத்­தின்­கீழ் இடம்­பெற வாக­னங்­கள் தகுதி பெறு­கின்­றன.

இத்­த­கைய வாக­னங்­க­ளுக்­கான சாலை வரி மற்ற வாக­னங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் குறைவு.

ஆனால் அவற்றை ஓர் ஆண்­டில் 28 நாள்­க­ளுக்கு மட்­டுமே பயன்­ப­டுத்­த­லாம். கட்­ட­ணம் செலுத்தி மேலும் 17 நாளு­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­த­லாம்.

இந்­தப் புதிய திட்­டம் குறித்து தகுதி பெறும் மோட்­டார் சைக்­கிள்­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளி­டம் கூடிய விரை­வில் தக­வல் தெரி­விக்­கப்­படும் என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் கூறி­யது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!