'அதிக விலை தேவைகளைக் குறைக்கக்கூடும்'

'அதிக விலை தேவைகளைக் குறைக்கக்கூடும்'

1 mins read
d6ce3ff4-602a-4eca-8f97-e22167593b5c
-

எரி­சக்தி விலை­ இவ்­வாண்டு உல­க­ளா­விய நிலை­யில் உயர்ந்­துள்­ள­போ­தி­லும் அடுத்த ஆண்டு அவை குறை­யக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

எரி­சக்தி விலை­ தொடர்ந்து அதி­க­மாக இருப்­ப­தால் அவற்­றுக்­கான தேவை­ மேலும் சரி­யக்­

கூ­டும் என்று நேற்று தொடங்­கிய ஆசிய பசி­பிக் எரி­பொ­ருள் மாநாட்­டில் எஸ் அண்ட் பி குளோ­பல் கொமோ­டிட்டி இன்­சைட்ஸ் நிறு­வ­னத்­தின் தலை­வர் திரு சௌகாட்டா சாஹா கருத்து தெரி­வித்­தார்.

2020ஆம் ஆண்­டில் கொவிட்-19 நெருக்­க­டி­நிலை தலை­தூக்­கி­ய­

தி­லி­ருந்து முதல்­மு­றை­யாக எரி­பொ­ருள் வர்த்­த­கர்­கள், சுத்­தி­க­ரிப்­பா­ளர்­கள், வங்கி அதி­கா­ரி­கள், பகுப்­பாய்­வா­ளர்­கள் போன்­ற­வர்­களை மாநாடு வர­வேற்­றது.

"உக்­ரேன்-ரஷ்யா போரைத் தொடர்ந்து எரி­சக்தி விநி­யோ­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் எரி­சக்தி, நிலக்­கரி, மின்­சா­ரம் முத­லி­ய­வற்­றின் விலை­கள் ஏற்­றம் கண்­டுள்­ளன.

"விலை நிலை­யற்­ற­தன்மை, விநி­யோக இடை­யூ­று­கள், வர்த்­த­கப் பாதிப்பு, தேவை­க­ளின் சரிவு ஆகி­யவை இவ்­வாண்டு உல­க­ளா­விய எரி­சக்தி சந்­தை­யில் நில­வும் புதிய மாற்­றங்­கள்," என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் திரு சாஹா தெரி­வித்­தார்.

மாநாட்­டின் சிறப்பு விருந்­தி­ன­ராக வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் லோ யென் லிங்

கலந்­து­கொண்­டார்.

உலக வங்கி முன்­வைத்­துள்ள பரு­வ­நிலை தொடர்­பான திட்­டத்தை நடத்த சிங்­கப்­பூ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் இத்­திட்­டம் வெளிப்­ப­டைத்­தன்மை மற்­றும் பொறுப்­பு­ணர்வை மேம்­ப­டுத்­தும் என்­றும் திரு­வாட்டி லோ கூறி­னார்.