லாவோஸ் பிரதமர் சிங்கப்பூர் வருகை

லாவோஸ் பிரதமர் சிங்கப்பூர் வருகை

1 mins read
574b1c7f-bd05-43f0-bf5a-dc3da95b7b82
-

லாவோஸ் பிர­த­மர் ஃபான்காம் விஃபாவான் சிங்­கப்­பூ­ருக்கு இன்­றும் நாளை­யும் அதி­கா­ர­பூர்­வப் பய­ணம் மேற்­கொள்­கி­றார்.

லாவோ­சின் பிர­த­ம­ராக இதுவே அவர் மேற்­கொள்­ளும் முதல் அதி­கா­ர­பூர்வ வெளி­நாட்­டுப் பய­ணம். பிர­த­மர் லீ சியன் லூங்­கின் அழைப்பை ஏற்று அவர் சிங்­கப்­பூ­ருக்கு வரு­கி­றார்.

அவ­ரு­டன் அவ­ரது மனைவி, அமைச்­சர்­கள், மூத்த அதி­கா­ரி­கள், வர்த்­த­கப் பிர­மு­கர்­கள் ஆகி­யோர் வரு­வ­தாக வெளி­யு­றவு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

திரு ஃபால்கா­முக்கு இஸ்­தா­னா­வில் சடங்­கு­பூர்வ வர­வேற்பு அளிக்­கப்­படும். அதை­ய­டுத்து, அவர் அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பை­யும் பிர­த­மர் லீயை­யும் நாளை சந்­தித்­துப் பேச இருக்­கி­றார். திரு ஃபான்கா­முக்­குப் பிர­த­மர் லீ மதிய உணவு விருந்­து­ப­ர­சிப்பு அளிப்­பார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இரு­நா­டு­க­ளுக்­கி­டை­யி­லான பல்­வேறு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தி­டப்­படும் நிகழ்­வில் பிர­த­மர் லீயும் திரு ஃபான்கா­மும் கலந்­து­கொள்­வர்.

இரு­நா­டு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சு­க­ளுக்­கும் இடை­யி­லான கலந்­து­ரை­யா­டல் தளம் இந்த ஒப்­பந்­தங்­க­ளால் நிறு­வப்­படும் என்­றும் எரி­சக்தி, சுற்­றுப்­புற, மின்­னி­லக்­கம் ஆகிய துறை­களில் ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­தும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

மூத்த அமைச்­ச­ரும் சமூ­கக் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான தர்­மன் சண்­மு­க­ரத்­னத்­தை­யும் திரு ஃபான்காம் சந்­தித்­துப் பேசு­வார்.

லாவோஸ் பிர­த­ம­ரை­யும் அவ­ரது மனை­வி­யை­யும் கௌர­விக்­கும் வகை­யில் புதிய வகை ஆர்க்­கிட் மல­ருக்கு அவர்­க­ளது பெயர்­கள் சூட்­டப்­படும்.