தினசரி சவால்களுக்குக் குறியீட்டு முறையின் வழி தீர்வுகள்

மாதங்கி இளங்­கோ­வன்

சிறு வயது முதல் கல்விக் காலம் முழு­தும் கணக்­குப் பாடத்­தில் தேர்ச்­சியே பெறாத 29 வயது மாணிக்­கம் நாச்­சி­யப்­பன் (படம்), இன்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தில் பொறி­யா­ள­ராக தரவு அறி­வி­யல் குழு­வில் அங்­கம் வகிக்­கி­றார்.

சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழகத்தில் செயல்­முறை பொறி­

யி­யல் பாடத்­தைக் கற்று பட்­டம்­பெற்ற மாணிக்­கத்­தின் கல்­விப் பய­ணம் எளி­தாக இருந்­த­தில்லை. கணக்­குப் பாடம் அவருக்குச் சவாலானது என்­றா­லும் அவ­ருக்­குக் கற்­பித்த விரி­வு­ரை­யா­ளர்க­ளின் உந்­து­த­லால் அவ­ரது விருப்­பப் பாட­மா­கவே அது அமைந்­தது. கணக்­கில் ஏற்­பட்ட ஆர்­வ­மும் குறி­யீட்டு முறை மொழி­க­ளின்­பால் ஏற்­பட்ட ஈடு­பா­டும் அவ­ரது பட்­டப்

­ப­டிப்­பில் தேர்ச்­சி­ய­டைய உத­வி­யது.

பல்­க­லைக்­க­ழகக் கல்­விக் காலத்­தில் இவருக்கு நிலப் போக்கு­ வ­ரத்து ஆணை­யத்­தில் பணி­பு­ரிய வாய்ப்பு கிட்­டி­யது.

மொத்­தம் எட்டு மாதங்­

க­ளுக்கு அங்கு பணி­பு­ரிந்த மாணிக்­கத்­திற்கு 'இண்­டர்­னெட் ஆஃப் திங்ஸ்' எனும் இணை­யக் கருப்­பொ­ருளை உள்­ள­டக்­கிய அறி­வார்ந்த அலு­வ­லக முறை­யைப் பயன்­ப­டுத்த வாய்ப்பு கிடைத்தது.

மேலும், 'பைத்­தன்', 'ரெஸ்­பெரி பை', 'டார்ட்' ஆகிய குறி­யீட்டு முறை மொழி­களைக் கற்­றுக்­கொண்டு உண்­மை­யான சூழ்­நி­லை­களில் பயன்­ப­டுத்­து­வ­தற்கு இவ்­வேலை வாய்ப்பு அதி­கம் உத­வி­யுள்­ள­தா­க­வும் பகிர்ந்­து­கொண்­டார்.

தொழில்­நுட்பத் திறனோடு மாணிக்­கத்­திற்கு இந்த வேலை­வாய்ப்பு, படைப்­பாற்­ற­லை­யும் பிரச் சினை­க­ளுக்குத் தீர்வு காணும் திற­னை வளர்க்­க­வும் ஆழ்ந்த சிந்­த­னைக்­கும் வழி­வ­குத்­துள்­ளது.

வழக்­க­நி­லைத் தேர்­வுக்­குப் பின் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் மின்­ன­ணு­வி­யல், கணினிக் கட்­ட­மைப்பு, தொடர்­புப் பாடத்­தைப் பயின்­றார் மாணிக்­கம். உயர்­நி­லைப்

பள்­ளி­யில் சிறந்த தேர்ச்சி பெற­

மு­டி­யாத சூழ­லால் தமது பெற்­றோருக்கு மன­வ­ருத்­தமே எஞ்­சி­ய­தா­கத் தெரி­வித்­தார் அவர்.

விடா­மு­யற்­சி­யா­லும் அய­ராத உழைப்­பா­லும் 3.85 புள்­ளி­க­ளு­டன் நேர­டி­யாக நன்­யாங் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் இடம்­பி­டித்தார்.

பலதுறை தொழிற்கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் அவர் பயின்ற கால­கட்­டத்­தில் அவ­ருக்கு மெல்ல மெல்ல குறி­யீட்டு முறை­யில் ஈடு­பாடு அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யது.

பல வித­மான குறி­யீட்டு முறை மொழி­களை அவர் தாமா­கவே பாட நேரங்­க­ளுக்கு அப்­பால் கற்­றுக்­கொண்­டார்.

வீட்­டிற்­குள் அந்­நி­யர்­களோ பயங்­க­ர­வா­தி­களோ நுழைய முயன்­றால் தம் குடும்­பத்­தாரை எச்­ச­ரிக்­கும் மணி­யொன்றை உரு­வாக்­கு­வது போன்ற சில எளிய ஆனால் முக்­கிய கரு­வி­க­ளைத் தயா­ரிப்­ப­தில் ஆர்­வம் கொண்­டார் மாணிக்­கம்.

தின­மும் பர­ப­ரப்­பான சூழ­லில் பணி­பு­ரி­யும் அவர் மக்­க­ளின் அன்­றாட பொதுப்­போக்­கு­வ­ரத்து பய­ணங்­களை எவ்­வாறு சுமு­க­மாக மாற்­றி­ய­மைப்­பது என்­ப­தற்­காக தேவை­யான தர­வு­க­ளைச் சேக­ரித்து ஆரா­யும் வேலை­க­ளி­லும் ஈடு­பட்டு வரு­கி­றார்.

தமது 14வது வய­தில் பெற்­றோ­ரு­ட­னும் சகோ­த­ரி­யு­ட­னும் தூத்­துக்­கு­டி­யி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த இவர், தமது பூர்­வீ­கத்­தின் தனித்­து­வ­மான பாரம்­ப­ரிய உணவை சமைத்து விநி­யோ­கம் செய்­தார்.

சில காலமே உணவு வியா­பா­ரம் செய்­தா­லும் இவ­ரது சமை­யல் இன்­னும் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் பிர­ப­ல­மாக உள்­ளது.

எனவே, எதிர்­கா­லத்­தில் உண­வுத் துறை­யில் ஈடு­படும் எண்­ண­மும் இவ­ருக்கு உள்­ளது.

பிற்­கா­லத்­தில், மாணிக்­கம் இன்­னும் பல பொறி­யி­யல் திட்­டங்­க­ளைத் தலை­மை­யேற்று வழி­ந­டத்­த­வும் தாம் கற்ற பாடங்­களை மற்­ற­வர்­க­ளுக்­கும் கற்­றுக்­கொ­டுக்­க­வும் விரும்­பு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!