உற்பத்தித் துறை 11 மாதங்களில் ஆகக் குறைவான வளர்ச்சி கண்டது

உற்பத்தித் துறை 11 மாதங்களில் ஆகக் குறைவான வளர்ச்சி கண்டது

2 mins read
47ba15ab-58dd-4761-9688-6d5759c087a3
-

மின்­ன­ணுத் துறை உற்­பத்தி தொடர்ச்­சி­யாக இரண்டு மாதங்­கள் வீழ்ச்­சி­ய­டைந்­த­தால் சிங்­கப்­பூ­ரின் மொத்த உற்­பத்தி ஆகஸ்ட் மாதம் மேலும் வீழ்ச்­சி­ய­டைந்­தது.

உலக அள­வில் பண­வீக்க உயர்வு, கடன் வட்டி விகித உயர்வு போன்­ற­வற்­றால் பய­னீட்­டா­ளர் தேவை குறைந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், மின்­ன­ணுத் துறை­யில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி ஏற்­று­ம­தியை நம்­பி­யி­ருக்­கும் சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லின் ஒட்­டு­மொத்த வளர்ச்­சியை பாதிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

சிங்­கப்­பூர் தொழிற்­துறை உற்­பத்­தி­யில் மின்­ன­ணுத் துறை­யின் பங்கு 40% என்­பது இங்கு நினைவு­கூ­ரத்­தக்­கது என ஆய்­வா­ளர்­கள் சுட்­டு­கின்­ற­னர்.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் சிங்­கப்­பூ­ரின் மொத்த உற்­பத்தி ஆகஸ்ட் மாதம் 0.5% வளர்ச்சி கண்­ட­தாக தெரி­விக்­கப்­பட்டது.

இதுவே ஜூலை மாதம் சரி­செய்­யப்­பட்ட உற்­பத்தி வளர்ச்சி 0.8%ஆக இருந்­த­தாக பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் நேற்று வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்டு­கின்­றன.

ஆகஸ்ட் மாத உற்­பத்தி வளர்ச்சி 2021ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதத்­துக்­குப் பின் ஏற்­பட்­டுள்ள ஆகக் குறை­வான வளர்ச்சி விகி­தம் என்று கழ­கம் தெரி­வித்­தது.

உயிர்மருத்­து­வத் துறைத் தவிர்த்­துப் பார்த்­தால், உற்­பத்தி 1.2% வீழ்ச்சி கண்­ட­தாக கழ­கம் கூறி­யது.

எனி­னும், ஒட்­டு­மொத்த வளர்ச்சி விகி­தம் புளூம்­பெர்க் தனது கணிப்­பில் தெரி­வித்த 0.7 விழுக்­காட்டைவிட நன்­றாக இருந்­த­தாக கூறப்­படு­கிறது.

முக்­கிய மின்­ன­ணுத் துறை­யின் உற்­பத்தி ஜூலை மாதம் 5.9 விழுக்­காடு வீழ்ச்சி கண்ட நிலை­யில், ஆகஸ்ட் மாத வீழ்ச்சி 7.8 விழுக்­காடு என அதி­க­ரித்­தது.

பய­னீட்­டா­ளர்­க­ளி­டையே தேவை குறைந்­த­தன் கார­ண­மாக மின்­ன­ணுத் துறை­யின் அனைத்­துப் பிரி­வு­க­ளி­லும் உற்­பத்தி வீழ்ச்சி ஏற்­பட்­டது.

இதில் மின்­னணு சாதனப் பிரிவு­களில் அந்­தச் சாத­னங்­க­ளுக்கு தேவை­யான உப­க­ர­ணங்­கள் பிரி­வி­லும் 19.3 விழுக்­காடு அள­வுக்கு வீழ்ச்சி ஏற்­பட்­டது.

தக­வல் தொழில்­நுட்­பம், பய­னீட்­டா­ளர் மின்­ன­ணுச் சாத­னங்­க­ளின் உற்­பத்தி 11.7 விழுக்­காடு வீழ்ச்சி கண்­டது.

இதற்கு அடுத்த நிலை­யில், மூன்­றா­வது மாத­மாக பகுதி மின்­கடத்­தி­க­ளின் உற்­பத்தி 6.6% வீழ்ச்­சி­ய­டைந்­தது. இதில் கணினி உப­க­ர­ணங்­கள், தக­வல் சேமிப்புத் துறை­க­ளின் உற்­பத்தி 5.5% வீழ்ச்­சி­ய­டைந்­தது.

பகுதி மின்­க­டத்­தி­க­ளுக்கு தேவை இவ்­வாண்டு வெகு­வா­கக் குறை­யும் என்­றும் இந்த நிலைமை அடுத்த ஆண்­டும் தொட­ரக்­கூ­டும் என்­றும் மைக்­ரான், இன்­டெல், நிவி­டியா போன்ற நிற­வனங்­கள் முன்­னு­ரைத்­துள்­ளன. இந்­நி­லை­யில், உலக அள­வில் இந்­தத் துறை கடும் வீழ்ச்சி காணும் என்ற கவலை எழுந்­துள்­ளது.

ரசா­ய­னத் துறை­யில் 11.2% வீழ்ச்சி ஏற்­பட்­டது. இதில் சிறப்பு ரசா­ய­னத் துறை 14 % வீழ்ச்­சி­ய­டைந்­தது.

இவை இப்­ப­டி­யி­ருக்க, உலக அள­வில் விமா­னப் பய­ணங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த கட்டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தால் விமான எரிபொரு­ளுக்­கான தேவை அதி­க­ரித்­தது. அந்­தத் துறை 8.1% வளர்ச்சி­ அடைந்­த­தாக கழ­கம் விளக்­கி­யது.

சிங்­கப்­பூ­ரின் ஏற்­று­ம­தி­யில் 15% இருக்­கும் மின்­னணு, ரசா­ய­னத் துறைப் பொருள்கள், உலக அள­வி­லும், குறிப்­பாக சீனா­வி­லும், இவற்­றுக்­கான தேவை குறைந்­து உள்­ள­தால், இந்­தத் துறை­கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கழ­கம் தெரி­வித்­துள்­ளது.